பந்து தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் ஆஸி வீரர் பில் ஹியூஸ்!(வீடியோ இணைப்பு)

0

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி மண்டையில் பந்து பயங்கரமாகத் தாக்க அவர் சிறிது நேரம் முழங்காலில் தன் கையை ஊன்றி தள்ளாடினார்.  

ஆனால் உடனடியாக பிட்சில் மயங்கி விழுந்தார். உடனடியாக மைதானத்திற்கு உதவி வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அடிபட்டதினால் மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் அல்லது அதிர்ச்சியை குறைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அறுவை சிகிச்சையின் விளைவுகள் தெரிய 24 மணி முதல் 48 மணி நேரங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் இவர் உயிர் பிழைக்க தங்கள் வேண்டுதல்களை எற்கெனவே ட்விட்டரில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
 






 
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)