DR.PIRAI: குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்!

3
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய வேண்டியக வேண்டிய 9 உணவு வகைகள்!


1.இஞ்சி

இஞ்சி சிகிச்சை மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

2.வேற்க்கடலை

வேர்க்கடலைகள் குளிர்காலங்களில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உங்கள் உணவில் சேர்த்து இவற்றை பெறலாம். இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

3.தேன்
இந்த குளிர்காலங்களில் உங்கள் உணவில் தேனை சேர்த்து கொள்ளுவது மிகச்சிறந்த ஒன்றாகும். இது உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவி புரியும்.

4.பாதாம்
பாதாமானது அதிக அளவில் பலன்களை அளிக்ககூடியதால் இது குளிர்காலங்களில் உட்கொள்ளும் உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். இது பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவி புரியும். இது சர்க்கரை நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

5.தானியங்கள்
சிறு தானியங்கள் குளிர்காலங்களில் உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து உங்கள் குழந்தைகளுக்கு அளித்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை அளிக்ககூடிய உணவுகளில் ஒன்றாகும்.

6.நீர் நிறைந்த பழங்களை தவிர்த்தல்
குளிர்காலங்களில் நீர் நிறைந்த உணவுகளையும் பழங்களையும் தவிர்க்க வேண்டும். உங்கள் உணவில் பேரிக்காய், ப்ளம் மற்றும் ஆரஞ்ச் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். அதிகமான நீர் நிறைந்த பழங்களை உட்கொண்டால் அது உங்களை உடலை மேலும் குளிர்ச்சியாக்கும்.

7.எள்ளு விதைகள்
குளிர்காலங்களில் எள்ளு விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறந்த பலனை பெறலாம். குளிர்காலங்களில் உங்கள் உணவில் வெப்பம் தரும் உணவுகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த எள்ளு விதைகள் உங்கள் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து மேடபாளிசத்தை மேம்படுத்த உதவி புரியும்.

8.ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவி புரியும். இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை இரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பல வகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

9.காய்கறிகள்
உங்கள் டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உங்களுக்கு தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவி புரியும். அதிக அளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை உட்கொள்ள வேண்டும்.
Advertisement

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மிகவும் பயனுள்ள பதிவு இது போன்ற பதிவுகள் தொடர்ந்து பதியுங்கள் மக்கள் அனைவரும் நோயுற்று வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக.............உணவே மருந்து என்பதற்கிணங்க உங்களின் இந்த பதிவுகள் அமையட்டும்...............................................................

    ReplyDelete
  2. உங்களின் இந்த அதிரை பிறை இணைய தளத்தில் மருத்துவம் மட்டுமல்லாது இந்திய சட்ட சாசனம் படிப்பு துரை பற்றியும் தாங்கள் பதிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்......தற்பொழுதைய கால கட்டத்தில் நமது சமுதாய இளைஞர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆகையால் வாரம் ஒரு முறையேனும் தங்களின் பதிவில் மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பது போன்ற பதிவுகளும் போட்டால் மிகவும் இளைஞர்களுக்கு பிரயோஜனமாக அமையும்....

    ReplyDelete
  3. சகோதரர் cmp faizal அவர்களுக்கு...

    உங்களின் மேலான இக்கருத்திற்கு நன்றி. உங்களை போன்ற வாசகர்களின் இது போன்ற கருத்துக்கள் தான் எங்களை மேன்மேலும் செயல்பட தூண்டுகின்றன.

    இந்திய சட்டம் மற்றும் கல்வி சார்ந்த பதிவுகளை வாரம் ஒரு முறை ஒரு பதியுமாறு ஆலோசனை கூறினீர்கள்.

    இதில் இந்திய சட்டம் அறிவது குறித்த பதிவுகள் இன்ஷா அல்லாஹ் நாளை முதல் "LAWYER PIRAI" என்ற பெயரில் பதியவுள்ளோம்.

    கல்வி சார்ந்த பதிவுகளில் மாணவர்களுக்கு வசதியாக தளத்தை மேம்படுத்தி வருகிறோம். தள கோடிங் பணிகள் முழுமையான முறையில் நிறவடைந்ததும் கல்வி சார்ந்த பதிவுகள் அதிரை பிறையில் தினசரி பதியப்படும்.

    ReplyDelete
Post a Comment