அதிரை பிறையின் புதிய முயற்சியாக ஆன்ட்ராய்ட் அப்லிகேஷன் (ANDROID APPLICATION) அறிமுகம்!

0
அதிரை பிறை இணையதளத்தின் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நமதூர் மக்களுக்கு மாறுபட்ட செய்திகளையும் வாசகர்கள் ஏளிமையாக தளத்தை பார்க்க‌ புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறோம். 

இதில் வீடியோக்களை பிறை ட்யூப் மூலமாகவும், பேஸ்புக் பக்கத்தை பிறை புக் மூலமாகவும், மருத்துவ ஆலோசனைகளை டாக்டர் பிறை மூலமாக‌வும், சமையல் குறிப்பு வீடியோக்களை மன்டே மசாலா மூலமாகவும், சட்டம் சார்ந்த விளக்கங்களை லாயர் பிறை மூலமாகவும் பதிந்து வருகிறோம். அதுபோல் ஜமாலு கமாலு, பிறையின் பார்வை, வெற்றிப்பாதை, இனிக்கும் இல்லறம், சிந்தனை சிறகுகள் போன்ற வித்தியாசமான படைப்பாற்றல் கொண்ட பதிவுகளை வெளிகாட்டி வருகிறோம். 

அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட போன்கள் அதிகம் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆண்ட்ராய்டு போனில் அதிரை பிறை யை எளிமையாக‌ உபயோகிக்க ஒரு அதிரை பிறை  ஆன்ட்ராய்டு  செயலியை உருவாக்கியுள்ளோம். 


சிறப்பம்சங்கள்:
  1. எந்தவொரு (ஒபேரா மினி, கூகுல் க்ரோம், யூசி ப்ரொவ்சர்) போன்ற எந்தவொரு  ப்ரோவ்சரும் (BROWSER) உதவியும் இல்லாமல் இலகுவாக இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் (INSTALL) செய்வதன் மூலம் ஒரே க்ளிக்கில் அதிரை பிறை தளத்தை பார்க்கலாம். 
  2. இந்த செயலிக்கு மிகவும் குறைந்த மெமரியே போதுமானது. 
  3. வெறும் 552 மெமரி கொண்ட இச்செயலியை குறைந்த நேரத்தில் தரவிறக்கம் செய்யலாம். 
  4. பிற ப்ரொவ்சர்களில்(BROWSER) (உபயோகிப்பதை விட இச்செயலியில் அதிரை பிறை தளத்தை வேகமாக உபயோகிக்கலாம். 
  5. இந்த செயலியை (APPLICATION) இலவசமாக அதிரை பிறை தளத்திலேயே தரவிறக்கம் (DOWNLOAD) செய்துக்கொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் இது போன்று மேலும் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். 

இதற்கு வாசகர்களாககிய உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)