கொள்ளையை தடுக்க செல்போன் மூலம் புதிய கருவியை கண்டுபிடித்த வாலிபர்!

0
















தமிழகத்தில் ஏடிஎம்களில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. 
இந்நிலையில் கொள்ளை சம்பவங்களை தடுக்க செல்போன் மூலம் புதிய கருவி ஒன்றை, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். உத்திரமேரூர் ஒன்றியம் மலை யான்குளம் கிராமத்தை சேர்ந்த பரத் (23) என்பவர் செல்போன் மூலம் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் பிஇ இன்ஜினியரிங் படித்துள்ளேன். தற்போது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு இளைஞர் படையில் வேலை பார்க்கிறேன்.  ஏடிஎம் மைய கொள்ளையை  தடுக்கும் பொருட்டு, செல்போனில் உள்ள போர்டை வைத்து கருவியை கண்டுபிடித்துள்ளேன்.
செல்போனில் உள்ள மதர் போர்டை ஒவ்வொரு ஏடிஎம் மையத்தில் பொருத்தவேண்டும். அதில் குறிப்பிட்ட சரக காவல் நிலைய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், வங்கி மேலாளர் உள்பட முக்கிய அதிகாரிகளின் 10 செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டும்.
ஏடிஎம் மையத்தை உடைத்தாலோ, அதில் உள்ள லாக்கரை திறக்க முயன்றாலோ 2 நொடிகளில் அதில் பதிவு செய்துள்ள எண்களுக்கு அழைப்பு செல்லும். அதனை யாரும் எடுக்கா மல் இருந்தால், தொடர்ந்து அரை மணிநேரத்துக்கு ஒலித்து கொண்டே இருக்கும். அந்த அழைப்பை எடுத்தால், மர்மநபர்கள் பேசுவது, குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை கேட்கலாம். உடனே சம்பவ இடத்துக்கு சென்று, அதனை தடுப்பதுடன், குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க முடியும்.
இந்த கருவிக்கான அதிகப்பட்ச செலவு ரூ.500 மட்டுமே. இதனை ஏடிஎம் மையம் மட்டுமின்றி, வங்கி லாக்கர், நகை கடை, கம்பெனிகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பொருத்தலாம். இதனை பொருத்துவதால், பணத்தை மட்டுமின்றி உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். இந்த கருவியை பொருத்துவதற்கு தனியார் மற்றும் அரசு வங்கிகள், நிறுவனங்கள் முன்வரவேண்டும். இதற்கான செயல் விளக்கம் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கு அனைவரும் வாய்ப்பு தரவேண்டும். இந்த சாதனையை 30 நாட்களில்  கண்டு பிடித்துள்ளேன் என்றார்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)