அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் முயற்சியில் அதிரையில் உள்ள அனைத்து குளங்களிலும் C.M.P.வாய்க்கால் வழியாக தண்ணீர் நிரப்பட்டது. இதன் பலனாக நேற்றைய தினம் பேரூராட்சி சார்பாக மீன் குத்தகை பற்றிய பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது .
இதனையடுத்து அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான குளங்களுக்கு மீன் குத்தகை (01-01-2015) முதல் (31-12-2015) காலத்திற்கான ஏலம் இன்று விடப்பட்டது . இந்த மீன் குத்தகை ஏலம் இன்று காலை 11 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது . மேலும் இதில் தமிழக அரசால் ரூ .50 லட்சம் நிதி ஒதிக்கி புதுப்பிக்கப்பட்ட செட்டியா குளம் ரூ 30,000 மேல் ஏலத்தில் சென்று உள்ளது.இந்த ஏலத்தின் மூலம் அதிரை பேரூராட்சிக்கு வருமானம் கிடைத்து உள்ளது குறிப்பிடதக்கது. இந்த ஏலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது