முதலமைச்சர் கோப்பைக்கான தஞ்சை மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் 6 ம் தேதி துவங்கியது. இதில் தஞ்சை விளையாட்டு விடுதி அணிக்காக அதிரை சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆசிப் அஹ்மத் அவர்களும் பங்கு கொண்டு விளையாடினார் .இந்த கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது .
இதில் பட்டுக்கோட்டை vs தஞ்சை விளையாட்டு விடுதி அணியினர் மோதினர் .இதில் பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி பெற்று முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை தஞ்சை அணியினர் பிடித்தனர் .மேலும் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது .
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டு உள்ள புகைப்படத்தில் வெள்ளை டி-ஷர்ட் அணிந்து உள்ளவர் அதிரை கைப்பந்து விளையாட்டு வீரர் ஆசிப் அஹ்மத் .

Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது