இவருக்கு 40 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஆமினா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
அதன்பின் நாகூர் பிச்சை, செய்யது என்ற பெண்ணை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற நாகூர்பிச்சை அங்கு பாபுஜி என்பவரது தலைமையில் இயங்கிய�சத்தியமே ஜெயம்� என்ற ஆசிரமத்தில் சீடராக சேர்ந்தார். அங்கு பாபுஜியுடன் நெருக்கமாக இருந்து சேவை செய்த நாகூர்பிச்சை, பாபுஜியின் அடுத்த வாரிசாக தேர்வு செய்யப்பட்டார்.
பாபுஜி சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். அதன்பின் நாகூர்பிச்சை குருஜியாக பதவி ஏற்றார். அங்கு பக்தர்களுக்கு ஆசியும், சீடர்களுக்கு பாடம் நடத்தியும் வந்தார்.
மேலும் பல புத்தகங்களை எழுதி அதை சீடர்களுக்கு கற்பித்து வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆசிரமத்துக்கு சீடராக வந்த மயிலாடுதுறை மற்றும் சென்னையைச் சேர்ந்த 2 பெண்களையும், சிங்கப்பூர், மலேசியா நாடுகளை சேர்ந்த மேலும் 4 பெண்களையும் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இதில் பலருக்கு திருமணமாகி பேரக் குழந்தைகளும் உள்ளனர். அனைத்து மனைவிகளும் தற்போது உயிருடன் உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் நல்ல நிலையில் வைத்திருக்கிறார். இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன் நாகூர்பிச்சைக்கு 2 கிட்னியும் பழுதாகி உடல் நிலை மோசமானது. இதையடுத்து முத்துப்பேட்டைக்கு வந்து 2வது மனைவி செய்யது அம்மாள் வீட்டில் தங்கினார்.
மருத்துவ சிகிச்சை செய்யாமல் தவம் இருந்த அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இது விபரம் அறிந்த சிங்கப்பூர் ஆசிரம நிர்வாகிகள் மற்றும் சீடர்கள் சமீபத்தில் முத்துப்பேட்டைக்கு வந்தனர்.
நாகூர் பிச்சை மரணம் அடைந்தால் அவரை முத்துப்பேட்டையில் அடக்கம் செய்து சமாதி கட்ட திட்டமிட்டனர். இதற்காக அருகேயுள்ள ஜாம்புவானோடை பகுதியில் ரூ.16 லட்சத்துக்கு நிலம் வாங்கப்பட்டது.
அங்கு சமாதி கட்ட பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. அவர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆசிரம நிர்வாகிகள் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் சமாதி கட்ட யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் ஒரு தடை உத்தரவை பெற்றனர்.
இந்நிலையில் நாகூர் பிச்சை கடந்த 26ம் தேதி மரணமடைந்தார். அவரது வீட்டின் எதிர்புறம் உள்ள முன்பு திட்டமிட்ட காலி இடத்தில் அடக்கம் செய்து சமாதி கட்ட முடிவு செய்தனர்.
இதற்கு நாகூர் பிச்சையின் குடும்பத்தினர் முத்துப்பேட்டை ஆசாத்நகர் முஸ்லிம் ஜமாத்திடமும், தெற்கு தெரு ஜமாத்திடமும் அனுமதி கேட்டனர். அவர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு நாகூர்பிச்சை உடலை முஸ்லிம் மார்க்கப்படி பள்ளி வாசலில் அடக்கம் செய்ய ஆசிரம நிர்வாகிகளும், உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்றிரவு ஆசாத்நகர் பள்ளி வாசலில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான ஆசிரம பக்தர்கள், சீடர்கள் மற்றும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது