10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வழங்கப்படும் விடைத்தாள்களில் கலர் ஸ்கெட்ச் பேனாவால் அடிக்கோடிடக் கூடாது என கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுசம்பந்தமாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2தேர்வு காலை 10மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கும் துவங்குகிறது. மாணவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் வரவேண்டும். தேர்வறைக்குள் 20 நிமிடத்துக்கு முன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் 30 பக்கங்களை கொண்ட கோடிட்ட விடைத்தாள்களாக இருக்கும். ஒரு பக்கத்திற்கு 22 கோடுகள் இருக்கும். உயிரியல் பாடத்தில் தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் இரண்டு மெயின் சீட்டுகளுடன் தலா 22 பக்கங்களை கொண்டதாக இருக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு 30 பக்கங்களும், அக்கவுன்டன்சி பாட விடைத்தாள்கள் 46 பக்கங்களை கொண்டதாக இருக்கும். இதில் முதல் 14 பக்கங்கள் கோடு இல்லாமலும், 15 முதல் 46ம் பக்கம் வரை கோடிட்டும் இருக்கும். மற்ற அனைத்து பாட விடைத்தாள்களும் 38 பக்கங்களை கொண்டதாக இருக்கும்.பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் 22 பக்கங்களை கொண்ட கோடிட்ட விடைத்தாள்களாக இருக்கும். ஒரு பக்கத்திற்கு 22 கோடுகள் இருக்கும். ஆங்கிலம் 2வது தாளுக்கான விடைத்தாளில் முதல் இரண்டு பக்கங்கள் கோடில்லாமல் இருக்கும்.
இதில், விளம்பரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும். தமிழ் 2ம் தாளுக்கு விடைத்தாளில் முன்பதிவு விண்ணப்பம் அச்சிடப்பட்டு இருக்கும். சமூக அறிவியல் விடைத்தாளில் முதல் 4 பக்கங்களில் வரைபடங்கள் இருக்கும்.கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட விடைத்தாள்கள் 30 பக்கங்களை கொண்டதாக இருக்கும். விடைத்தாள்களில் ‘ரப் ஒர்க்‘ வலது ஓரத்தில் செய்யாமல், கீழ் பகுதியில் செய்து பார்க்கவேண்டும். மேலும், கலர் ஸ்கெட்ச் பேனாக்களில் அடிக்கோடு இடுவதை தவிர்க்க வேண்டும். மை பேனாக்களை பயன்படுத்தவேண்டும். கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.அவற்றை வெள்ளை நூல்கொண்டுகட்டி கொடுக்கவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது