மல்லிப்பட்டினம் 17-02-214 அன்று பாப்புலர் ப்ரண்ட் கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா 1989 - 1990 காலக்கட்டங்களில் தோற்றுவிக்கப்பட்டு கடந்த 17-02-2007ஆம் ஆண்டு மூன்று மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக செயல்பட தொடங்கியது அதன் விளைவுதான் இன்று 23 மாநிலங்களில் சிறப்பான பணிகளை செய்து வருகிறது.இந்த அமைப்பு அறிவிக்கப்பட்ட நாளான 17-02-2007 இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பித்து வருகின்றனர் இந்த நாளில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் பல விதமான நிகழ்சிகளை நடத்திவருகின்றனர் அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டினத்தில் இன்று கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மல்லிப்பட்டினத்தில் இரண்டு இடங்களில் பாப்புலர் ப்ரண்ட் கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது காயிதேமில்லத் நகரில் உமர் யூனிட் தலைவர் முஹம்மது ரபிக் அவர்களும்,பேருந்து நிலையத்தில் மல்லிப்பட்டின SDPI-ன் நகர அமைப்பாளர் முஹைதீன் பிச்சை அவர்களும் கொடியேற்றி சிறப்பித்தனர்.
இந்த விழாவில் பொதுமக்களும்,பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்த்யாவின் செயல் வீரர்களும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது