அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா!(படங்கள் இணைப்பு)

0


அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மேலும் பள்ளியின் நிர்வாக பொருளாளர் ஹாஜி A.அஹமது இப்ராஹீம் நிகழ்ச்சியில் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.முன்னதாக இந்த வருட பள்ளியின் சாதனைகள் மற்றும் நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்த ஆண்டறிக்கையை பள்ளியின் முதல்வர் ஆசிரியை திருமதி .ஆஃப்தாப் பேகம் வாசித்தார்கள். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக  ராஜாமடம் அண்ணா பல்கலைகழக டீன் . Dr.G.இளங்கோவன் M.E.,Ph.D., அவர்கள் ஆண்டு விழா உரை நிகழ்த்தினார்.  

இதனை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இதில்  10,12 வது வகுப்பில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியர் ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. 

அடுத்து மாணவ மாணவிகளின் நாடகம் ,அரபிக் பைத்,போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இறுதியாக திரு .யாசர் அரபாத் அவர்கள்  நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் , பள்ளி அலுவலர்கள்  ,முன்னால் மாணவர்கள் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .


















Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)