அதிராம்பட்டினம் பகுதியில் 3,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி!

Unknown
0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மறவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இதில் மத்திய அரசுக்கு சொந்தமாக 2,000 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமாக 1,000 ஏக்கரிலும் உப்பளங்கள் அமைந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் உப்பின் தரத்தை ஆய்வு செய்ய இங்கு மத்திய அரசின் உப்புத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலம் முதல் இங்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இங்கு உப்பு சீசன் தொடங்கும். இத்தொழிலை நம்பி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். 

தற்போது வாய்க்கால் சீரமைத்தல், பாத்தி கட்டுதல் போன்ற பணிகள் முடிவடைந்து பாத்திகளில் கடல்நீரை பாய்ச்சும் பணி நடந்து வருகிறது. இந்த கடல்நீரை மோட்டார் மூலம் இறைத்து உப்பு பாத்திகளில் நிரப்புகின்றனர். அடுத்த 20 நாட்களில் இங்கு உப்பு உற்பத்தி தொடங்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த உப்பு தரமானதாக இருக்கிறது. இதனால் இந்த உப்பிற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் உப்பு உற்பத்தியானவுடன் இங்கு அந்த மூட்டைகளை அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம்.  மழை போன்ற இயற்கை சீற்ற காலங்களில் இந்த பாத்திகளில் மழைநீர் தேங்கும். வெயில் காலம் தொடங்கியவுடன் இவற்றை சீரமைப்பதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபடுவது வழக்கம். தற்போது இவ்வாறான பணிகள் முடிவடைந்து உப்பு உற்பத்தி துவங்க உள்ளது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)