டாக்டர் பட்டம் பெற்ற முன்னாள் எம்.பி. அப்துற்றஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை!
அடிக்கவில்லை எங்கள்
அப்துற்றஹ்மான் தம்பட்டம்
அதனாற்றான் கிட்டியது
அமெரிக்காவின் இப்பட்டம்!
எங்களூர்க்குப்
பக்கத்துஊர் ஆள்
இயக்கத்தின்
ஈடிலாப்போர் வாள்!
அயராத உழைப்புக்கு
அல்லாஹ்வின் நன்கொடை
உயர்வுடன் வாழ்த்தும்
உடன்பிறப்புப் பிறைப்படை
பணிவும் உங்களிடம்
பணிசெய்யத் துள்ளும்
துணிவும் உங்களைத்
தோழமை கொள்ளும்
நாடாளுமன்றத்தில் உங்களின்
நாடறிந்தப் பேச்சு
கோடானுகோடி மனங்களில்
கொடியேற்றி ஆச்சு
பிரிந்த இளைஞர்களைப்
பிசகின்றி அணைத்த பிரியம்
சரிந்தச் சமுதாயம் வீறுகொண்ட
சான்றுகளால் புரியும்
வேதனைப் படுகின்றது
வேலூரும் தேடுது
சாதனை மன்னரைச்
சார்ந்திருக்க நாடுது
அன்புடன்கவியன்பன் கலாம், அதிரை (பாடசாலை)அபுதபி (தொழிற்சாலை)


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது