துபாய் – திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் மாற்றம்!

Editorial
0

துபாய் - திருச்சி இடையே பகலில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மார்ச்29 முதல் இரவு நேர விமானமாக மாற்றம் செய்யப்படுகிறது.

தினசரி சேவையாக துபாய் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் இந்த IX612 விமானம் தற்பொழுது காலை 07:15 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மதியம் 12:55 திருச்சி சென்றடைகிறது. பிறகு திருச்சியிலிருந்து IX-611 விமானம் 14:15க்கு புறப்பட்டு மாலை 17:05 க்கு துபாய் வந்து கொண்டிருக்கிறது.

கோடைகாலத்தையொட்டி பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் துபாய் - திருச்சி விமான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 29ம் தேதி முதல் மாலை 18:25 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 00:05 மணிக்கு திருச்சி சென்றடையும் பின்னர் நள்ளிரவு 00:55 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:45 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)