பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதயமான தினமான பிப்ரவரி 17 அன்று ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம் எனற முழக்கத்தை முன்வைத்து தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாபெரும் ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடத்த திட்டமிடப்பட்டு காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது. காவல்துறை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் காவல்துறை முன்வைத்த பல பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பிப்ரவரி 17 அன்று தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து நீதி வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் நீதியரசர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 14 அன்று சென்னையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டி மீண்டும் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (14.03.2015) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்ட ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தடையை மீறி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முகம்மது இஸ்மாயீல் அவர்கள், “தமிழக காவல்துறையின் தொடர் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிரான நீதிக்கான போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்கள்.
Advertisement











1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது