இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் இந்தியப் பயணிகள் தங்களுக்கு பன்றிக் காய்ச்சல் இல்லையென மருத்துவச் சான்றிதழ் வைத் துக்கொள்வது கட்டாயம் ஆகியுள்ளது. இது தொடர்பாக சவுதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவே இதற்கு காரணம்.
இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ரஹீம் குரேஷி கூறும்போது“பல்வேறு காரணங்களால் நம் நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
ஹஜ் செய்யும் போது, கூடும் லட்சக்கணக்கான மக்களிடையே இது தொற்றிவிடாமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது நல்ல விஷயம் தான். இதை வரவேற்கிறோம்” என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணம் செல்லும் இந்திய முஸ்லிம்கள் அதற்கான விசாகோரும் போது, மனநலம் மற்றும் உடல்நலம் குறித்த மருத்துவச்சான்றிதழை இணைப்பது கட்டாயம் வழக்கமாக உள்ளது.
இதில் காசநோய் போன்ற தொற்று நோய்கள் குறித்த மருத்துவச்சான்றிதழ்களை இணைப்பதும் அவசியமாக உள்ளது. இந்த தொற்றுநோய் களுக்கான பட்டியலில் தற்போது பன்றிக்காய்ச்சலும் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஹஜ் கமிட்டியினருக்கு சவுதி அரசு கடிதம் மூலம் அனுப்பியுள்ளது.
அதில் இந்த ஆண்டு ஹஜ் புனித செய்ய இந்தியாவிலிருந்து வரும் அனைவரும் பன்றிக்காய்ச்சல் இல்லையென மருத்துவச்சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று உறுதிபடக் கூறியுள்ளது.
இதுகுறித்து உ.பி யில் ஹஜ் சேவை மையம் நடத்தி வரும் நாஜீம் பேக், கூறும்போது, “உ.பி. உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பரி சோதனைக்கு ரூ. 6 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே 2 முதல் 2 அரை லட்சம் வரை ஹஜ் பயணம் மேற்கோள்ள செலவிடுகிறோம். எனவே இந்த மருத்துவ பரிசோதனையை அரசு சார்பில் இலவசமாக செய்து, சான்றிதழ்களும் அளிக்கப்படவேண்டும் என்றார்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது