அதிராம்பட்டினம் என்றால் 'ஆட்டை கழுதையாய் மாற்றிய ஊர்' என்பது மட்டும் தான் நாம் எல்லோருக்கும் தெரியும். அதைபோல கொத்தனாரை கூட இன்ஜினியராய் மாற்றிய ஊர் இது.
அதிரையில் சில வருடங்களாக பட்டங்களே இல்லாமல் ஏமாற்றும் போலி இன்ஜினியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஏமாற்று வேலையில் ஈடுப்பட்டு வருபவர்கள் பலர் அதிரையை சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு மாணவனும் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு ஊர்களில் கல்லூரி படிப்பை படித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் பலர், பல சிரமங்களையும் தாண்டி பல்வேறு இன்ஜினியரிங் படிப்பு படித்து, பட்டம் பெற்றும் அவர்களை இன்ஜினியர் என எவரும் அழைப்பதில்லை. காரணம், அவர் சிவில் இன்ஜினியர் படிக்காமல் மற்ற இன்ஜினியரிங் படித்துள்ளாராம். ஆகையால் அவர்களை இன்ஜினியர் என அழைப்பதில்லை.
இம்முறை படி பார்த்தால் சிவில் இன்ஜினியர் படித்தவர்களை மட்டும்தான் இன்ஜினியர் என அழைக்கவேண்டும். இதை விட்டுவிட்டு கட்டுமான செலவுகளை தெரிந்து வைத்தவரை கூட இன்ஜினியர் என அழைக்கின்றனர்.
அவர்களும் அந்த இன்ஜினியர் என்ற பெயரை வெட்கமின்றி தன்வசம் ஆக்கிவரிகின்றனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் பெயர் எழுதும்போதும் கூட இன்ஜினியர் என்று சேர்த்து பெயர் எழுதுகின்றனர். உதாரணமாக Er.________BE & DCE என்று எழுதுகின்றனர். இவ்வாறு செயல்படுவதை தவிர்த்து நேர்மையான முறையில் செயல்பட அல்லாஹ் அவர்களுக்கு உதவிபுரிவானாக ஆமின்..
ஆக்கம்: இர்ஷாத் பின் ஜஹபர் அலி
அதிரை பிறை
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது