பன்றிக்காய்ச்சல்:-
பொதுவாக நம் மக்களிடையே , பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வுகளைக் காட்டிலும் , பயம் தான் அதிகமாக உள்ளது..
இறுதிவரை நம் மக்கள் பயத்துடனே , பன்றிக்காய்ச்சலை பற்றிய அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ளாமலே போய் விடுகின்றனர்
அறிகுறிகள் :-
வழமையான பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அவற்றுள் பின்வருவன அடங்கும்: காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம். குறிப்பாக உடல் சூடாதல் - சுரம் (100.o F க்கு மேல்), தலைவலி, தசைவலி , உடல் பலவீனம், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். அவற்றுடன் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பன சேரக்கூடும்.
பின்வரும் சிக்கல்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்:
வேகமான மூச்சு விடுதல், மூச்சு விடுதலில் சிரமம்
நீலம் அல்லது பழுப்பு நிறத்தோல்
தேவையான அளவு நீர் உட்கொள்ளாமை
நிற்காத, கடும் வாந்தி
தூங்கிக்கொண்டே இருத்தல், கலந்துரையாட விருப்பமின்மை
பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் தாக்கி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.
பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம்.
டமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம்.
ரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம்.
இந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும்.
நோய் பரவாது தடுப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்;:
உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 நொடிகள் வரை கழுவவும்
உங்கள் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
மென்தாள் கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் உங்கள் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.
உங்களிடம் மென்தாள் இல்லாவிட்டால், உங்கள் சட்டைக் கை அல்லது புயம் கொண்டு இருமவும் அல்லது தும்மவும் - கை கொண்டு இருமவோ, தும்மவோ கூடாது.
சளிக்காய்ச்சல் நுணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது.
காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி போன்ற சளிக்காய்சலுக்குரிய அறிகுறிகள் போன்றவை, மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகள் போன்றவை தென்படுகின்றனவா என்று உற்றுநோக்கவும். தென்பட்டால், வீட்டிலேயே தங்கியிருக்கவும். நோய்வாய்ப்பட்டால், வீட்டிலேயே தங்கியிருக்கவும். நன்கு ஆறித்தேறவும், உடற்செயல் புரியவும், பானங்கள் நிறையப் பருகவும், சத்துணவு உண்ணவும்.
நன்றி: DR.சர்வத் காம்.தமுமுக மாநில மாணவர் அணி
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது