தாஜ் மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கவேண்டும் என்று ஆக்ரா நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர்கள் நாடியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் என்பவர் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் தரப்பில்," தாஜ்மஹால் இருக்கும் இடம் முற்காலத்தில் கல்லறையாக இருந்ததில்லை.அங்கு சிவன் கோவில் மட்டுமே இருந்தது.அந்த இடத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கியுள்ளார்.இந்துக்கள் வழிபாடு செய்த இடம் பின்னர் கல்லறையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் இந்துக்கள் அங்கே சிவ வழிபாடு நடத்த அனுமதி தரவேண்டும்.ஒருபோதும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் தற்போது இந்திய தொல்பொருள்துறையின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Courtesy:VIKADAN
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது