மாற்றுத் திறனாளியான தனது 7 வயது அண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெருவில் எலுமிச்சம் ஜூஸ் விற்று ரூ.15 லட்சம் ரூபாயை 5 வயது சிறுமி சேர்த்துள்ளார். அமெரிக்காவின் டொரொண்டோ நகரை சேர்ந்த நாடாவ் என்ற சிறுவனுக்கு இரண்டு வயதானபோது ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் என்ற நரம்பு மண்டலத்தை பாதிப்படைய வைக்கும் கொடிய நோய் தாக்கியது. நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூளையின் செயல்திறனும் பேச்சுத்திறனும் தடைப்பட்டது. நாடாவுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் அவனது பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.
இந்த சோகத்தை பகிர்ந்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அதை தீர்க்கும் வழியையும் தேடி தங்களது பெற்றோர் நடத்திவரும் தெருவோர கடையில் கோடைக் காலத்தில் எலுமிச்ச ஜுஸ், குளிர்காலத்தில் சூடான சாக்லேட் பானங்களையும் விற்று தனது அண்ணனுக்காக நாமா உஸான் சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார். இந்த சிறுமிக்காகவே அந்த தெருவோரக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் 20 ஆயிரம் டாலர்களை நாடாவின் சிகிச்சை செலவுக்கு நிதியாக உதவியுள்ளார்.
நன்றி:தினகரன்
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது