அதிரைக்குப் புகழ் சேர்க்கும் கவியன்பன் கலாமின் கவிதை, துபை தினத்தந்தியில் இன்று வெளியீடு

Editorial
0

இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்கள் வஃபாத்தாகிய செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. இது குறித்து அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் எழுதிய  கவிதை தினத்தந்தியின் துபாய் பதிப்பில் வெளியானது.


மிகவும் அருமையான கவிதை. கடல் கடந்து சென்றும் தன்னுடைய கவி ஆற்றலால் அதிரைக்கு புகழ் தேடி வரும் கவியன்பன் கலாம் அவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தினத்தந்தியில் வெளியான கவியன்பன் அவர்களின் கவிதை இதோ உங்களுக்காக...

இசைமுரசின் இன்னொலி
இன்று ஓய்ந்தது!

நாகூரின் வானம்பாடி
நாயனைத் தேடி ஓடியது!

சிங்கக் குரலோனின்
சங்கநாதம் எங்கே கேட்போம்?

மரபுப் பாக்களின் ஓசையும்
அரபு மொழியின் அழகு நயமும்
எவர்தான் இனிமேல்
இவர்போல் ஒலிப்பார்?


பிலால்(ரலி) அவர்களின்
மரணத்தைப் பற்றிப் பாடி
பிழிய வைத்த குரலே
உன்றன் மரணத்தால்
உடைந்துவிட்டது இதயமே!

ஓடி வருகின்றான்
உதயச் சூரியன் என்று
பாடிய பாட்டால்
பட்டி தொட்டியெல்லாம்
கட்சியை வளர்த்தாய்!

கண்ணியமிகு
காயிதேமில்லத்(ரஹ்)
கண்ணீருடன் கேட்பார்கள்
உன்னிடமிருந்து
உருகும் பாடலை


இறைவனிடம் கையேந்துங்கள்
இந்து முஸ்லீம் வேறுபாடின்றி
நிறைவுடனே யாவரையும் பாட வைத்து
நிம்மதியாய்ச் சென்று விட்டாய்!

ஆரத்தழுவி ஆவி பிரிய
ஆண்டுகள் பல முன்பே
ஆசைப்பட்டது
 இன்று நிறைவேறியதோ
இறைவனும் , இரசூலும்(ஸல்)
இரசித்த பாடல்கள் அல்லவா
இதயக் கூட்டிலிருந்து வந்தவைகள்!


மண்ணறைக்குட் சென்றாலும்
மண்ணகம் மறவாது
மங்காது உன்றன் கீதம்!

மரணத்தை நினைவூட்டினாய்
மரணித்த பின்னும்
மரணத்தை  நினைவூட்டுவாய்
மறக்க முடியாத உன்றன் பாடல்களால்!

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)