அதிராம்பட்டினத்தில் ரஹ்மானியா மதர்ஸாவின் 100வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நேற்றும் இன்றும் (23,24-05-2015) நடைப்பெற்றது. இரண்டு நாட்கள் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சி தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அயிரக்கணக்கான உலமாக்கள், பொதுமக்கள் அதிராம்பட்டினத்துக்கு வருகை தந்தனர்.
விழா பந்தல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. மேலும் விழாவில் நடைப்பெறும் மார்க்க சொற்பொழிவுகளை பொதுமக்கள் கேட்கும் வண்ணமாக பல பகுதிகள் ஒளிபெருக்கிகள் கட்டப்பட்டது. ரஹ்மானியா மதர்சாவின் நூற்றாண்டு விழாவால் அதிரையே கடந்த இரண்டு நாட்களாக களைகட்டி இருந்தது.
இந்நிகழ்ச்சி இன்றைய தினத்தின் முக்கிய அம்சமான மாணவர்களுக்கு ஸனத் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியோடு நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டன.
மேலும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களால் நிகழ்ச்சி நடைப்பெறும் வேலை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது எனவே இப்பதிவில் நிகழ்ச்சி நடைப்பெறும் போது உள்ள புகைப்படங்களை பதியவில்லை.
மேலும் நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்ட்ப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு உதவும் விதமாக SDPI கட்சியை சேர்ந்த பலர் களப்பணியாற்றி வருகின்றனர்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது