அதிரையில் செக்கடி மேடு நடை பயிற்சி பாதையை A.M.K அகமது திறந்து வைத்தார்!(படங்கள் இணைப்பு)

3


அதிரையில் தற்பொழுது செக்கடி குளம் நவீனமாக்கப்படும் பணி முழு வீச்சில் நடைப்பெற்றது.அனைத்து பணிகளும் நிறைவுற்றதை அடுத்து தற்போது திறப்பு விழா நிகழ்ச்சி மிக சிறப்பாக செக்கடி குளம் நடைமேடை பகுதியில் துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ஹாஜி A.M.இக்பால், ஹாஜி.S.முகம்மது ஹசன்(சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர்), ஹாஜி.M.S.முகம்மது உமர்,ஹாஜி.M.M.S.ஷேக் நசுருதீன் (தலைவர்,AAMF), திரு.A.பிச்சை (பேரூராட்சி மன்ற துணை தலைவர்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

 செக்கடி குளம் நடைப் பயிற்சி பாதையினை A.M.K.அகமது (70 வயதை தாண்டியும் நாள் ஒன்றுக்கு 6 கி.மீ நடந்து கொண்டு இருக்கும் நடைபயிற்சியாளர்)அவர்கள் திறந்து வைத்தார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியில் டாக்டர்.H.அப்துல் ஹக்கீம்,டாக்டர் ஹனீப் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.இதனை தொடர்ந்து நமதூரின் பிரபல தொழில் அதிபர் ஹாஜி ஜனாப் M.S தாஜுதீன் அவர்கள்  நடைமேடை பராமரிப்பு பொறுப்பை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். 

இதனைதொடர்ந்து மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கும் சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஜே. ஹாஜா கனி, 'உடற்பயிற்சியும், உணவுப் பழக்கமும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கிறார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்.





















  
Advertisement

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மிக்க எழிலுடன் காட்சி தரும் இந்த நடைபாதை, குப்பை மேடாக மாறிவிடாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும்; நன்கு பராமரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டுகின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க சரியாக சொன்னீர்கள். இவ்வளவு செலவுகள் சிரமங்களையும் வென்று திறப்பு விழா கண்டிருக்கும் இப்பகுதியை இனி வருங்காலங்களில் முறையாக பராமரிப்பதிலேயே உள்ளது இதன் எழில்.

      அதே போல் நம்மிடத்தை பராமரிப்பதும் பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை.

      Delete
  2. மேலும் இந்த இடத்தை அசுத்தம் படுத்தாமல் இருக்க அந்த வலை வேலிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் நபிமொழிகளை தொங்கவிட்டால் நன்றாக இருக்கும். இதை நம் இளைஞர்களே செயல் படுத்தலாம்.

    ReplyDelete
Post a Comment