முன்பெல்லாம் ஊருக்கு ஒரு மருத்துவர் இருப்பார். அவரிடம் நோயாளிகள் சென்று தங்கள் இயலாமையை எடுத்துக்கூறுவர். அவரும் எந்த விதமான நோயாக இருந்தாலும் ஒரு ஊசி, வெள்ளை, ஊதா, பச்சை, ரோஸ் கலர்களில் மாத்திரைகளை காலை மாலை இரு வேலைகளிலும் போட சொல்லி நோயாளிகளை அனுப்புவார்.
ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு துறை படிப்பு உருவாகிவிட்டது. பல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், எழும்பு முறிவு மருத்துவர், சர்க்கரை நோய் ஸ்பெசலிஸ்ட், குழந்தை மருத்துவர், என எண்ணிடங்கா மருத்துவ படிப்புகள் உருவாகி விட்டன. மேலும் அந்த உறுப்புகளுக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய நவீன தொழில்நுட்பங்கள் பல உருவாகிவிட்டன. மெதுவாக குணமடைய, வேகமாக குணமடைய, முழுமையாக குணமடைய என பல டோஸ்களில் மருந்துகளும் உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றன. நாள்தோரும் பல்வேறு புதிய நோய்களுக்கு பல்வேறு விதமாந நல்ல மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையும், மருந்தகங்களின் எண்ணிக்கையும், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகளும், மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
தமிழகத்தில் மருத்துவத்துறை இப்படி ஒரு அபிரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இந்த வளர்ச்சி ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், அங்குள்ள உபகரணங்களிலும், அங்கு வழங்கப்படும் மருந்துகளிலும் பிரதிபளிக்கின்றன. ஆனால் இவை ஏனோ அந்த மருத்துவரிடம் மட்டும் பரிதிபளிக்கவில்லை. தன்னை சுற்றி உள்ளவற்றை மாற்றிக் கொள்ளும் மருத்துவர்கள் தன்னை மாற்றிக்கொள்ளாமல் பழைய பழனிபஞ்சாமிர்தமாகவே உள்ளனர்.
மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் விசாரித்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை மருந்துச் சீட்டில் எழுதித் தருவார்கள். ஆனால் இவர்கள் எழுதித் தருகிறார்களா இல்லை கிறுக்கி தருகிறார்களா என குழம்பும் அளவுக்கு Doctor English என்று சொல்லக்கூடிய டங்லீஷ் மொழியில் எழுதித்தருவார்கள். இந்த டங்லீஷில் எழுதுவதர்க்கு மருத்துவர்கள் தனி கோர்ஸ் எதாவது படித்திருப்பார்களோ என்றே சிந்திக்க தூண்டுகின்றது. ஏற்கனவே நோயுடன் வந்த நோயாளிக்கு இந்த டங்லீஷ் மருந்து சீட்டை பார்த்த பிறகு இந்த சீட்டில் மாத்திரையா, ஊசியா, டானிக்கா என்ற குழப்பத்திலேயே இவர்களின் நோய் தீவிரமாகிவிடும். ஆனால் இந்த டங்லீஷ் தெரிந்த இருவர் மருத்துவர்களும், மருந்துக்கடைக்கார்களும் தான்.
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் தெரியும், என்கோடிங் டீகோடிங் பற்றி. என்கோடிங் என்றால் நாம் அனுப்பும் தகவலை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்க்காவ கோட் செய்து அனுப்புவார்கள். டீகோடிங் என்றால் அனுப்புனரிடம் கோட் செய்யப்பட்டு வந்த அந்த தகவலை பிரித்து எடுப்பது. இது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்க்காக உபயோகப்படுத்தும் ஒரு தொழில் நுட்பம். இதனை தான் மருத்துவர்களும் மருந்துக்கடை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். இதனால் நோயாளி தவறான மருந்துகளை உட்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் இந்த டங்க்லீஷ் மருந்து சீட்டால் தாங்கள் உட்கொள்ளும் மருந்தின் பெயர்களை கூட தெரியாமல் உள்ளனர் நோயாளிகள். அனைத்திலும் வளர்ச்சியடைந்த மருத்துவர்கள் இனி வரும் காலங்களிலாவது கிறுக்கல் டங்க்லீஸ் எழுத்துக்களை விடுத்து சாதா இங்கிலீஷில் எழுதினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது