சவூதியில் இருப்பவர்களுக்கான ‪எச்சரிக்கை பதிவு‬!

0


உங்களிடம் யாராவது குறிப்பாக எமனி (ஏமன் நாட்டவர்) "எனக்கு உடனடியாக பணம் தேவைபடுவதாக கூறி விலை உயர்ந்த மொபைலை காட்டி இதை மிக குறைந்த விலைக்கு தருகிறேன் என சொல்லி தந்தால் வாங்கிவிடாதீர்கள்.

"ஐய் நல்லா ஏமாந்துட்டான் வந்தவரை லாபம்" என நினைத்து வாங்கினால் ஏமாறுவது நீங்களாகதான் இருக்கும். காரணம் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் போலி சைனா மோபைலை உங்கள் கையில்கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிடுவார்கள். அல்லது எங்காவது திருடிய மொபைலோ அல்லது கீழே கிடந்து எடுத்த மொபைலையோ உங்களிடம் விற்றுவிடுவார்கள் அதை நீங்கள் அன்லாக் செய்ய முற்பட்டாலோ, உபயோகிக்க ஆரம்பித்தாலோ உங்ள் வீட்டு வாசலில் போலீஸ் வந்து நிற்கும். 

இப்பொழுது சவூதியில் தம்மாம்,ரியாத்,ஜிசான்,ஜித்தா போன்ற நகரங்களில் பரவலாக இந்த ஏமாற்றுவேலை நடக்கிறது. இதில் அதிகமாக விவரமில்லாத நம் தமிழர்களே ஏமாறுகிறார்கள். ஏமாந்துவிடாமல் விழிப்போடு இ்ருங்கள்.

‪‎தகவல்:அதிரை உபயா(எ)உபயத்துல்லா
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)