திருச்சி ஏர்போர்ட்டில் புதிய பயணிகள் மையம் திறப்பு! (படங்கள் இணைப்பு)

Editorial
0
திருச்சி விமான நிலையத்தில், புதிய பயணிகள் புறப்பாடு மையம் திறப்பு விழா, நேற்று நடந்தது. திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், சோதனைக்கு பிறகு விமானம் தயார் ஆகும் வரை, பாதுகாப்பு அறையில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பாதுகாப்பு அறையில் போதிய சேர்கள் இல்லாததால், கூடுதலாக ஒரு அறை தயார் செய்யப்பட்டு, 50 கூடுதல் சேர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி, ஸ்கேன் வசதி ஆகியவை செய்யப்பட்டது. இந்த புதிய பாதுகாப்பு அறையை விமான நிலைய இயக்குநர் நெகி, நேற்று திறந்துவைத்து பேசுகையில்,

ஓய்வெடுக்கும் பயணிகள் வசதிக்காக ஸ்நாக்ஸ் ஸ்டால்கள் அமைக்கப்படும். மேலும், 200 கோடி ரூபாய் செலவில் விமான நிலைய முனையத்தில், டெர்மினல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புறப்பாடு பகுதியில், 80 மீ., அளவுக்கும், வருகை பகுதியில், 101 மீ., அளவுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 விமான நிலையத்தின் முன்பகுதியில், ஸ்கேனோபி (மேற்கூரை) அமைக்கப்பட உள்ளது. கேன்டின் அமைக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இம்மாத இறுதியில் கேன்டின் திறக்கப்படும்'' என்றார்.




Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)