மிஃராஜ் என்னும் ‘நபிகளாரின் விண்ணகப்பயணம்‘ சிறப்புக் கவிதை

0
விண்ணகமும் மண்ணகமும்
வியந்துபோற்றும் நபிகளார்(ஸல்)
விண்ணகப் பயணமேகிய
விந்தைமிகு நன்னாள்!

விண்ணகத்திலிருந்து வாங்கி வந்த
வெற்றித் திறவுகோல் தொழுகை
மண்ணகத்தின் மாந்தர்க்கு
மாபெரியோன் வழங்கிய பொன்னாள்!

ஹிரா குகையில் தனிமையில்தவம்
இடைவிடாத  பிரச்சார  பலன்
புராக் வாகனமேறி வந்தநபி(ஸல்)க்கு
புலமையோன் கொடுத்தான் வரம்!

ஒளியுடன் ஒளியும்
உரையாடிய நேரலை
மிளிரும் அத்தஹ்ஹியாத்
மிஃராஜ் வடிவிலே!

மூசா(அலை)க்குக் கிட்டவில்லை;
முஹம்மத்(ஸல்)க்குக் கிட்டியது
ஆசையுடன் வரவழைத்து
ஆனந்தம் கொண்டான் அல்லாஹ்!



எந்தக் கண்ணும் கண்டிராத
எந்தச் செவியும் கேட்டிராத
அந்தச் சுவன இன்பங்களை
அஹ்மத்நபி(ஸல்) பார்த்த நாள்




-அதிரை கவியன்பன்கலாம், அபுதாபி



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)