அதிரையில் ADT வழங்கும் தொடர் தாவா பயிற்சி!

Editorial
0
கடந்த இரு வாரங்களாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள தர்பியா மையத்தில் சென்னை மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவைச் சேர்ந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 'தாவா ஏன்? எப்படி? என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் 'தாவா செய்ய நம்மை நாமே தயார் செய்து கொள்வது எவ்வாறு? என்ற தலைப்பிலும் இளைஞர்கள் மற்றும் தாவா ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் பயிற்சி வகுப்புக்கள் தொடரவுள்ளன. இந்த பயிற்சி களத்திற்கு வரும் சகோதரர்கள் மறவாமல் தங்களுடன் தமிழாக்க குர்ஆன் பிரதி ஒன்றையும் குறிப்பெடுக்க ஏதுவாக நோட்டு புத்தகம் ஒன்றையும் தங்களுடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த வாரத்தை போன்றே வரும் வெள்ளிக்கிழமை 05.06.2015 அன்றும் கீழ்க்காணும் வகையில் ஏகத்துவ அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

1.    ALM ஸ்கூல் ஜூம்ஆ உரை
2.    பிலால் நகரில் அஸருக்குப் பின் பெண்களுக்கான பயான்
3.    மஃரிப் தொழுகைக்குப் பின் பிலால் நகரில் 'தஃவா பயிற்சி வகுப்பு'

கடந்த வாரம் நிகழ்ந்த தாவா பயிற்சி வகுப்பின் புகைப்படங்கள்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)