தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 14 வகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இவை முறையாக வழங்கப்பட்டதா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளில் ஆண்டுப் பொதுத் தேர்வுகள் நடந்தன. ஏப்ரல் மாதத்துடன் பள்ளி பணி நாட்கள் முடிவுக்கு வந்ததால், பல பள்ளிகளில் ஏப்ரல் 3வது வாரம் முதலும், பல பள்ளிகளில் மே மாதம் முதல் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை விடப்பட்டது.கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடும் வெயில் அடிப்பதால் புதுச்சேரியில் பள்ளிகள் 12ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
இதையடுத்து புது வகுப்பில் ஆண்டின் முதல் நாளில் இன்று பள்ளிக்கு மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர்.நீண்ட விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய மாணவ, மாணவிகள் இன்று புது யூனிபார்ம், புது பேக், புது லஞ்ச் பாக்ஸ் சகிதமாக பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச புத்தகங்கள், நோட்டுகள், வண்ணப் பென்சில்கள், வரைபடப் புத்தகம் என 14 வகை பொருட்கள் வழங்கப்பட்டன. 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 46 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தலா 2 இலவச சீருடைகளும், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புவரை படிக்கும் 1 கோடியே 11 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு இலவச பாடப்புத்தகங்களும், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 77 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு இலவச நோட்டுகளும் வழங்கப்படுகிறது. இதற்காக இந்த இலவச பொருட்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் அதிரையில் உள்ள அரசு எண் 01 மற்றும் எண் 02 ஆகிய பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இன்று மேற்கூறப்பட்ட இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அதிரை துணை பேரூராட்சி தலைவரும், அதிமுக நகர செயலாளருமான பிச்சை தலைமையில், PTA தலைவர் தமீம், PTA நிர்வாகி ஹாஜா பகுருதீன், கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு இலவச பொருட்களை வழங்கினர். இதனை மாணவ மாணவிகள் மகிழ்ச்சியோடு பெற்றுச் சென்றனர்.
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t34.0-12/11117655_853080618075134_1597846631_n.jpg?oh=bd8a820851409646fe926bd399879818&oe=556E7951&__gda__=1433295469_7881999de9da49ad72b5be4b1ec04b4b)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t34.0-12/11358667_853080614741801_1309917364_n.jpg?oh=aa0925b96a0ef61817ea864a4c4bdb8c&oe=556ED10F&__gda__=1433305004_fd9dc02ec149a33ed990d10fc050ef50)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t34.0-12/11292832_853080601408469_2097792068_n.jpg?oh=2370d87e94462def33fe203b9aa8fffe&oe=556E5FEE&__gda__=1433375133_1f90a1ae0bb0af89fb4a444d0cd184b4)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t34.0-12/11350096_853080588075137_1369115358_n.jpg?oh=ce66352cfc92454815d5d97fa0377c73&oe=556EC84A&__gda__=1433293754_1f6ba3c3e3b598d68161212bb95ea477)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t34.0-12/11121657_853080564741806_1352393531_n.jpg?oh=1cbff427f3c9bf867efd072cde28d2b8&oe=556ECF64&__gda__=1433325912_66daf74ca15d78013f1115651b632cd1)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t34.0-12/11121404_853080551408474_2135431208_n.jpg?oh=d5f8dbaf6bbfbe39ce698ebc716b4279&oe=556E8CE0&__gda__=1433300944_efbaa409476ca0982111f21cb53bedd6)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t34.0-12/11303677_853080544741808_252268063_n.jpg?oh=beef69fb7edf1cbda4672f4a07db9ad0&oe=556E63E3&__gda__=1433290300_a895a8a0a9e5585413458e86bc9acb2b)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t34.0-12/11297830_853080518075144_1578407560_n.jpg?oh=8e68def9fc521509e83df6b6a0f9263c&oe=556EBE5D&__gda__=1433316398_295dc73aaed9b6cbffca5a33e9b6f217)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t34.0-12/11099758_853080511408478_666835438_n.jpg?oh=29de49ed75c172570a8b0af9cb904aa9&oe=556E8718&__gda__=1433308423_14ccabd4fe89af379efacaeb7c87691d)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t34.0-12/11335846_853080504741812_785496874_n.jpg?oh=9423925dcc317b921b0c04af4a2408f3&oe=556E9592&__gda__=1433312416_0ffc23f46e7327528d7252f5ec147cb8)
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது