அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றி அசத்திய அதிரை AFCC! (படங்கள் இணைப்பு)

Editorial
0

அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய எட்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 26-05-2015 அன்று நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைப்பெற்றது.

இதில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடினர். இதன் இறுதிப் போட்டி இன்று மதியம் துவங்கி நடைபெற்றது. இதில் AFCC அணி அணியை எதிர்த்து சிட்னி ஃப்ரெண்ட்ஸ் அணி களமிறங்கியது. இதில் AFCC அணி 49 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

இதன் மூலம் முதல் பரிசான ரூபாய் 10000 மற்றும் வெற்றியாளர்களுக்கான சுழற்கோப்பையை வென்றது. இறுதி போட்டியில் தோல்வியடைந்த SFCC அணி ரண்ணரஸ் கோப்பையையும், 7000 ரூபாய் பரிசுத் தொகையையும் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற AFCC அணிக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.













Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)