அம்மாவை விடாமல் விரட்டும் தலைவலி!

Editorial
3


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்:

இன்று காலை 11 மணியளவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், 7-வது விவகாரமாக ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார், சட்டத் துறை செயலர் தங்கப்பா ஆகியோர் அளித்த அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு சில அமைச்சர்கள் மேல்முறையீடு தேவையில்லை என்றனர். ஆனால், பெரும்பான்மையான அமைச்சர்கள் ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றனர். இதனையடுத்து மேல்முறையீடு செய்வதென முடிவு எட்டப்பட்டது.

இந்த முடிவை கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

சிறப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம்:

மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவை நியமித்து கர்நாடக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. அவருக்கு உதவியாளராக சந்தேஷ் சவுட்டா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அரசாணை இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சார்யா வரவேற்பு:

கர்நாடக அமைச்சரவை எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா பேட்டி அளித்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான தீர்ப்பு:

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 11-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 19 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையான கணிதப் பிழைகள் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. மேலும், தீர்ப்பில் பிழை இருப்பதால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு முழு தகுதி படைத்தது என அரசுக்கு பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், தற்போது ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டுமா? மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையா ஆகியவை குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரிடம் கர்நாடக அரசு கோரியது.

இதுகுறித்து அவர் அரசிடம் அளித்த பதிலில், "சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதியானது அல்ல. இந்த தீர்ப்பில் பல அடிப்படை கூட்டுத்தொகை பிழைகளும் சட்டரீதியான தவறுகளும் உள்ளன. குற்றவியல் வழக்குகளில் சட்ட ரீதியான முடிவை எட்டும்வரை மேல்முறையீடு செய்யலாம்.

நீதி நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே கடந்த 2003-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக நீதித்துறை, அரசு மற்றும் அரசு வழக்கறிஞர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலே உச்ச‌ நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது. எனவே நீதியை நிலைநாட்டும் விதமாக ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது கர்நாடக அரசின் கடமையாகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு காலதாமதம் செய்யாமல் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிரை நியூஸ் நடத்திய விழாவில் ஏன் மகரிப். தொழுகைக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை? அதிரை நியூஸ் நிர்வாக குழுவில் எத்தனை முஸ்லிம்கள் உள்ளனர்? பெண்களுக்கு தனி இடவசதி செய்த நீங்கள் ஏன் அவர்கள் தொழுகை நடத்த இடம் மற்றும் நேர ஒதுக்கி கொடுக்கவில்லை? இதுலையே தெரிவுது இது முழுக்க முழுக்க பெருக்காக நடத்தப்பட்ட விழா? எனவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக மற்றும் முஸ்லீம்கள் விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டும். இதன்மூலம் பெயர் மற்றும் புகழ் விரும்பிகளின். உண்மை முகம் உலகம் தெரிய வேண்டும்.

    ReplyDelete
  2. அதிரை நியூஸ் நடத்திய விழாவில் ஏன் மகரிப். தொழுகைக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை? அதிரை நியூஸ் நிர்வாக குழுவில் எத்தனை முஸ்லிம்கள் உள்ளனர்? பெண்களுக்கு தனி இடவசதி செய்த நீங்கள் ஏன் அவர்கள் தொழுகை நடத்த இடம் மற்றும் நேர ஒதுக்கி கொடுக்கவில்லை? இதுலையே தெரிவுது இது முழுக்க முழுக்க பெருக்காக நடத்தப்பட்ட விழா? எனவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக மற்றும் முஸ்லீம்கள் விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டும். இதன்மூலம் பெயர் மற்றும் புகழ் விரும்பிகளின். உண்மை முகம் உலகம் தெரிய வேண்டும்.

    ReplyDelete
  3. சரி இனி இந்த உண்மை தகவலினை வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பதிந்து உலகறிய செய்கிறேன்

    ReplyDelete
Post a Comment