அதிரையில் மதம் கடந்த இருவரின் மேன்மையான உன்னதமான நட்பு!

Editorial
1
அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் K.T.M.தாவூத் பாட்ஷா. இவர் அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இஸ்லாமிய மக்கள் பஜ்ர் தொழுகைக்கு மிகக்குறைவான எண்ணிக்கையில் வருகை தருவதை எண்ணி மிகவும் கவலை அடைந்தார். இதனை தன்னுடைய நண்பராகிய ராஜாமடத்தினை சேர்ந்த மாற்றுமத சகோதரரிடம் இது குறித்து கவலையுடன் கூறியுள்ளார். இதனை அடுத்து நண்மையான காரியம் செய்ய எண்ணிய அந்த மாற்று மத சகோதரர் தன் நண்பராகிய தாவூத் பாட்ஷா அவர்களை அழைத்துக் கொண்டு திருச்சி சென்றுள்ளார்.

அங்கு தாவூத் பாட்ஷா அவர்களுக்கு அவருடைய நண்பர் விலை உயர்ந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய திறன் கொண்ட மைக் ஒன்றும் ஒலி பெருக்கியும் வாக்கி அன்பளிப்பு செய்துள்ளார். மாற்று மத சகோதரரான தன்னுடைய நண்பரின் செயலை எண்ணி வியந்தது மட்டுமல்லாமல் அந்த அன்பளிப்பை மனதார ஏற்றுள்ளார். மேலும் அந்த சகோதரர் வழங்கிய மைக் மற்றும் ஒலி பெருக்கியை வைத்துக்கொண்டு தன்னுடைய TVS XL மூலம் அதிரையில் ஒரு நாளைக்கு ஒரு தெருவிற்க்கு பஜ்ர் பாங்கு சொன்ன பிறகு அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று தொழுகைக்கு அழைத்து வருகின்றார் தாவூத் பாட்ஷா. இதன் மூலம் ஒருவர் பஜ்ர் தொழுகைக்கு எழுந்து சென்று தொழுதால் கூட இவர் மறுமையில் பெரும் நண்மைகள் கணக்கிட முடியாதது.

உலகில் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற மக்களுக்கு மத்தியில் பிரிந்துக்கொண்டு கொண்று குவிக்கும் கொடூரர்கள் மத்தியில் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்று பாராமல் நண்பருக்காக அவருடைய மதம் சார்ந்த அழைப்பை செய்வதற்க்கு அதிக பொருட்செலவில் அன்பளிப்பு செய்த அந்த இராஜாமடத்தை சேர்ந்த மாற்று மத சகோதரரின் நட்பு வியக்க வைக்கிறது.

இதுபோன்று தான் ஜாதி, மதம் பாராஅது அனைவரும் தமிழர்கள், இந்தியர்கள் ஒரு தாய் மக்கள் என்று என்னி சூழ்ச்சியாளர்களின் சதிவலையில் விழாமல் நாம் வாழ்ந்தால் நம்மை எதிர்ப்பவர்களும் நம்மவர்களாக நல்லவர்களாக வாழ்வார்கள்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
தகவல்: மனிச்சுடர் சாகுல் ஹமீது.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாஷா அல்லாஹ்...!. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் தருவானாக. இதன் பலனை நிச்சயம் நீங்கள் மறுமையில் அறுவடை செய்வீர்கள். இறைவனிடம் துவா செய்கின்றேன்.

    அதிரை முஜீப்

    ReplyDelete
Post a Comment