திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் வாலிபர் ஒருவர் சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஏரிப்புக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிராபாகரன். இவருக்கும் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு மலையாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி மகள் மாரியாயி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் 6 வயதில் சுதாகர், சுரேஷ் ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். அன்றைய முதல் பிரபாகரன் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பாத பிராபாகரன், நேற்று காலை அதே பகுதியில் உள்ள சுடுக்காட்டில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், சப்-இன்ஸ்பெக்டர் நதியா அ10கியோர் சென்று தூக்கில் தொங்கிய பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பிராபகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்தில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.
நிருபர் முஹைதீன் பிச்சை
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது