அதிரை கடற்கரைத் தெரு ஜமாத்தின் கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் முழு வீடியோ!

Editorial
0
கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு இணைந்து நடத்திய 4ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்று (29-05-2015) மாலை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கடற்கரைத் தெரு ஜமாத் ஆலோசகர் S.M.அக்பர் ஹாஜியார்  அவர்கள் தலைமை வகித்தார்கள் . கடற்கரைத் தெரு ஜமாத் தலைவர் Engr. M.அகமது அலி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.மேலும் அதிரை பேரூராட்சி 8 வது வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர்  J.ஹாஜா கனி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் +2, 10 பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் கடற்கரைத்தெருஅமீரக அமைப்பின் இணை செயலாளர் M.அகமது அன்சாரி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள்,ஊர் பிரமுகர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள்,தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்,பள்ளி ஆசிரியர்கள் என பலர்  கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)