ரமலான் மாதம் வந்து விட்டால் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சி தான். மாதம் முழுவதும் ஏழையாக இருக்கட்டும் பணக்காரராக இருக்கட்டும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
பகல் முழுவதும் நோன்பிருந்தாலும் கூட முகத்தில் எந்த களைப்பும் இன்றி முகமலர்ச்சியுடன் தொழுவது குர்ஆன் ஓதுவது என்று இருப்பார்கள். அதிரையில் இந்த ரமலான் மாதம் மிகவும் கோலாகலமாக இருக்கும். தெருவுக்கு தெரு வாடா, சம்சா கடைகள், கபாப் கடைகள் தோன்றி இருக்கும். பள்ளிகள் பாதி நாள் மட்டுமே இயங்கும். இளம் வயதிலேயே குர்ஆந் மனனம் செய்த ஹாபிழ் கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் தராவீஹ், வித்ரு தொழுகைகள் வைப்பார்கள். பள்ளிகளில் அஸர் தொழுகைக்கு பிறகு சுவையான நோன்புக்கஞ்சி, மாசித் தொட்டுக்கரியுடன் அழகான சஹர் உணவு, விதவிதமான உணவு வகைகளுடன் இஃப்தார், குப்பாயம் முசல்லா போட்டுக்கொண்டு சாலையில் அழகாய் செல்லும் இஸ்லாமிய சிறுமிகள், தமாம் வசூலுக்கு வீடு வீடாக வரும் சிறுவர்கள் என நமதூரில் நடக்கும் ஒவ்வொரு அழகான விசயங்களும் ரமலானை நமக்கு நினைவு படுத்துகின்றன.
-நூருல் இப்னு ஜஹபர் அலி
இன்னும் இரண்டு வாரங்களும் சில நாட்கள் மட்டுமே ரமலானுக்கு மீதம் உள்ளது. தற்போது ரமலானை முன்னிட்டு நமதூரில் உள்ள பள்ளிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நமதூர் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி புதுப்பிக்கப்படும் காட்சிகளை கீழே உள்ள படங்களில் காணலாம்
Advertisement
அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு,
ReplyDeleteகடந்த 25.05.2015 அன்று நீங்கள் அதிரையில் சாதனையாளர்கள் மற்றும் கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மகரிப் தொழுகைக்கு இடைவெளி விடாமல் நடத்தினீர்கள். இதுதொடர்பாக நான் பலமுறை உங்களது தளத்தில் கருத்து தெரிவித்தேன் ஆனால் நீங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் எனது கருத்தை நீக்குவதிலேயே குறியாக இருந்திர்கள் என்பது உங்களின் செயல்கள் மூலம் வாசகர்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று என்னும் அதிரை நியூஸ் நிர்வாகிகளே இன்னும் சிலதினத்தில் நீங்கள் எந்த ஓர் நிகழ்வை நடத்தி பெருமை பாடிநீர்களோ அந்த நிகழ்வில் நீங்கள் வழங்கிய விருதுகள் மீண்டும் உங்கள் முகத்தின் முன் தூக்கி வீசப்பட இருக்கிறது. அதற்காக வேண்டிய பணிகளை நாங்கள் இன்று காலைமுதல் துவங்கி உள்ளோம். விருதுகள் பெற்றவர்களை நேரில் சந்தித்து உண்மைநிலையையும் நீங்கள் உண்மையை மறைக்க செய்த செயல்களையும் எடுத்து கூறி நீங்கள் வழங்கிய விருதுகளை உங்களிடமே திருப்பி கொடுக்க வைக்கிறோம். இதன் முதல் வெற்றியாக இரண்டு நபர்கள் அவர்கள் பெற்ற அதிரை நியூஸ் சாதனையாளர்கள் விருதுகளை திரும்பி கொடுக்க முன்வந்துள்ளனர். விரைவில் அனைவரும் ஒன்றாக ஓரிடத்தில் கூடி பெற்ற விருதுகளை திருப்பி கொடுப்போம்! எங்களுக்கு இந்த உலகின் புகழ் தேவையில்லை உங்களின் புகழ் பாடும் விருதும் தேவையில்லை எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!