FLASH NEWS: அதிரை ECR சாலையில் பயங்கர விபத்து! ஒருவருக்கு பலத்த காயம்!

Editorial
0
அதிரை ஈ.சி.ஆர் சாலை ஃபேமிலி மார்ட் அருகே இன்று மாலை 6:30 மணியளவில் எதிரெதிரே வேகமாக வந்த வந்த இரண்டு பைக்குகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் ஏரிப்புறக்கரை சேர்ந்த வடிவேலு (27) என்பவருக்கு முகம் மற்றும் கண்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து விபத்துக்குள்ளானவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் நமதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து அங்கு இருவருக்கும் அரசு மருத்துவமனை இரவு நேர மருத்துவர் ராமசாமி முதலுதவி சிகிச்சை அளித்தார். மேல் சிகிச்சைக்காக இவர்கள் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஈ.சி.ஆர் சாலையில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.









Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)