உலக அறிவியல் அறிஞர்கள் போற்றும் 'மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில்!

Editorial
1
டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னை, புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் பயோடெக்னாலஜி துறைத் தலைவர். 'மண்புழு விஞ்ஞானிஎன்பதுதான் அவரது நிரந்தர அடையாளம். இப்போது உலக அளவில் மண்புழு உரம் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. ஆனால், இது தொடர்பாகக் கடந்த 20 வருடங்களாக ஆய்வுசெய்து அப்போதே மண்புழு உரத்தை உருவாக்கியவர்!

மண்புழு உரத் தொழில்நுட்பத்தைக் குறிக்க 'வெர்மி டெக் என்ற வார்த்தையை உருவாக்கிய இவர், உலகம் முழுக்கப் பயணித்து மண்புழு உரத்தின் பெருமைகளை உரக்கப் பேசிவருகிறார். இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுபவர், பள்ளிக் குழந்தைகளுக்கு 100 விதமான அறிவியல் செய்முறைகளை இலவசமாகப் பயிற்றுவிக்கிறார். அந்த அடிப்படை செய்முறை அறிவியலை தென் மாநிலப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் பொறுப்பை மத்திய அரசு இவரிடமும் ஒப்படைத்துள்ளது. கழிவுநீரை எளிய முறையில் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களைச் செழிக்கச் செய்திருக்கிறார் இஸ்மாயில்!

தற்போது இவர் சென்னை ECO SCIENCE RESEARCH FOUNDATION அமைப்பின் இயக்குனராகவும், சென்னை புதுக் கல்லூரியின் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றார்.

மண்புழு மீது ஆர்வம் வந்தது குறித்து பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள் கூறியது 

மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மீது மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்த மனிதர் அவர். "நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை!"

அடிப்படையில் நான் விலங்கியல் மாணவன். 1978-79-ல் சென்னை புதுக் கல்லூரியில் எம்.ஃபில். படிப்பை முடித்து, அங்கேயே ஆசிரியப் பணியிலும் சேர்ந்தேன். அப்போது ஒரு மாணவர் என்னைச் சந்திக்கவந்தார். அவருக்கு எம்.ஃபில். படிக்க அங்கு இடம் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும் அவரிடம் இருந்தது. அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, கல்லூரியின் ஆய்வக உதவியாளர் எங்களைக் கடந்து சென்றார். 'ஆய்வகத்தில் என்ன உயிரினங்கள் இருக்கின்றன?' என்று அவரிடம் கேட்டேன். 'மண்புழு இருக்கு, சார்' என்றார். உடனே அது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினோம்.

எங்கள் கண்டறிதல்களை ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டோம். 1980-ம் ஆண்டு மண்புழுவின் இயல்புகள் குறித்து இந்தியாவில் வெளியான முதல் ஆய்வுக் கட்டுரை அது. பிறகு அது எவ்வாறு விவசாயத்துக்கு உதவும் என்பது குறித்துப் பல ஆய்வுகளைச் செய்தோம்.

இவற்றை அடிப்படையாக வைத்துச் சில போலிகளும் அப்போது வந்தனர். அவர்கள் அறிமுகப்படுத்திய வெளிநாட்டு மண்புழுக்கள் நமது மண்ணைச் சீரழித்தன. எங்கிருந்து வேண்டுமானாலும் மண்புழுக்களைக் கொண்டு வரலாம். ஆனால், அவை அந்தந்த மண்ணில் இருந்து பிறந்தவையாக இருந்தால் மட்டுமே, அது பயன்படும்.

இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும், உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முயன்றபோதுதான் வந்தனா சிவா, நம்மாழ்வார், கிளாட்ஆல்வாரெஸ் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. அனைவரும் சேர்ந்து 'அரைஸ்'(ARISE - Agriculture Renewal in India for Sustainable Environment) எனும் இயக்கத்தை ஏற்படுத்தினோம். அதன் மூலம் மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வையும் அக்கறையையும் ஏற்படுத்த முடிந்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சி!

ஆங்கிலத்தில் DemystifyingScience என்ற சொல்வார்கள். அறிவியல் தொடர்பான தவறான கருத்துகளை நீக்கி, அறிவியல் மேதைகள்தான் கடினமான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்ற கற்பிதத்தை உடைத்து, குழந்தைகளிடம் அவற்றைக் கொண்டு சேர்ப்பதே அதன் முக்கிய சாராம்சம். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன், அனைவரிடமும்.

நம்மைச் சுற்றி நாம் அறியாமலேயே அறிவியல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் சில விஷயங்களில் ஒளிந்திருக்கும் அசாத்தியமான சிந்தனையை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், 100 அறிவியல் சோதனைகளைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். எளிய முறையில் நமது வீடுகளிலேயே அவற்றைச் செய்துபார்க்க முடியும் என்பதுதான் இதில் சிறப்பம்சம். இந்த அறிவியல் பரிசோதனைகள் 'simple tasks great concepts' என்ற தலைப்பில் யூ டியூபிலும், 'ஆப்' ஆகவும் கிடைக்கின்றன. என்னுடைய வலைப்பூவிலும் அவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
  


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. கடந்த 25.05.2015 அன்று அதிரை நியூஸ் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது அப்பொழுது அவர்கள் மகரிப் தொழுகைக்கு நேரம் ஒதுக்காமல் விழாவை தொடர்ச்சியாக நடத்தியுள்ளனர். இதுகுறித்து நான் முதலில் அதிரை நியூஸ் இணையத்தில் கருத்து சொன்னேன் ஆனால் அவர்கள் எனது கருத்துக்கு பதில் கூறாமல் எனது கருத்துக்களை நீக்கிவிட்டனர். இன்றும்கூட நான் அவர்கள் தளத்தில் இதுகுறித்து முறையிட்டேன் அவர்கள் பதில் சொல்லாமல் மக்கள் மத்தியில் புகழ் வேண்டும் என்பதற்காக மகரிப் தொழுகை சம்மந்தமான கருத்தை நீக்கி வருகின்றனர். இவர்களிடம் நான் உண்மையை வெளிக்கொண்டு வர எனது நண்பர்கள் இனைந்து அவர்கள் வழங்கிய விருதுகளை அவர்களிடமே திருப்பி கொடுக்கும் முயற்ச்சியில் இரங்கி உள்ளோம் விரைவில் எந்த இடத்தில் வைத்து இஸ்லாமிய மார்க்கதிற்கு புறம்பான விழா நடத்தப்பட்டதோ அதே இடத்தில் வைத்து அவர்கள் வழங்கிய புகழ்பாடும் விருதுகள் திருப்பி கொடுக்கப்படும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
Post a Comment