தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் மக்கள் விரோத நில அபகரிப்பு சட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், இந்த கொடூர சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் ஒருபகுதியாக (10.6.2015) அன்று மாலை பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பாக தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்க்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் M.முஹம்மது பைசல், பட்டுக்கோட்டை தொகுதி துணைத்தலைவர் மதுக்கூர் காதர், பட்டுக்கோட்டை பொருப்புகுழுததலைவர் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் SDTU மாநில துணை தலைவர் S.சம்சுதீன், SDPI-கட்சி மாவட்ட பேச்சாளர் S.நிஜாமுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.
அந்நிய மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நிலத்தை ஒப்புதலின்றி ஆக்கிரமித்து அளிக்கும் மக்கள் விரோத ‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தினை’ அவசர சட்டம் மூலம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
இரண்டுமுறை அவசர சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கார்ப்பரேட் நலன் விரும்பும் மோடி அரசு, தொடர்ந்து பிடிவாதமாக இந்த மக்கள் விரோத சட்டத்தினை நிறைவேற்றியே தீருவோம் என கங்கணம் கட்டி 3வது முறையாக மீண்டும் அவசர சட்டம் வாயிலாக இந்த கொடூர சட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் நலன் காப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்து அரியணையில் அமர்ந்த பின்னர், வாக்குறுதிக்கு மாறாக விவசாயிகளை கொடூர சட்டம் வாயிலாக கொல்லத் துணிந்துள்ளது மத்திய பாஜக அரசு.
பாஜக அரசின் இந்த மக்கள் விரோத சட்டத்தினை எதிர்த்தும், மத்திய அரசு இந்த சட்டத்தினை கைவிட வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் SDPI கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் மக்கள் விரோத நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக ஜூன் 01 முதல் ஜூன் 15 வரை மாபெரும் பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது. சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரம் விநியோகம், பேரணிகள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்கள், விவசாயிகள் சந்திப்பு, பொதுக்கூட்டம் ஆகியவற்றின் வாயிலாக இந்த பிரச்சார இயக்கத்தை SDPI கட்சி தமிழகம் முழுவதும் நடத்திவருகிறது.
நிகழ்ச்சியின் இறுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.அமானுல்லா அவர்கள் நன்றியுறையாற்றினர்.


Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது