அதிரையில் சிறு துளி! பெரு வெள்ளம்!

0

அதிரையில் கடந்த இரண்டு நாட்களாக விடாமல் பெய்த தூரல் மழையால் அதிரையில் உள்ள பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையால் பலர் சந்தோசப்பட்டாலும் அதிரை சேது ரோட்டு பத்தாவது வார்டு மக்களுக்கு மழைக்காலம் என்றால் துயர் நீங்கா இன்னலாகவே வந்து முடிகிறது. காரணம்! கால்வாய் பிரச்சனை. 


இந்த மக்கள் தங்களால் என்ன என்ன முயர்சிகளை செய்ய முடியுமோ அத்தனை முயர்சிகளையும் இவர்கள் செய்துள்ளனர். விளைவாக எந்த பயனும் இல்லை. அதிரையின் அதி முக்கிய வடிகால் கால்வாயான இதில் தான் ஊரில் அனைத்து சாக்கடை கழிவுக களும் வந்து சேர்கின்றன. இந்த பகுதிகளில் சரிவர் குப்பைகளை அல்லாத காரணத்தினால் குப்பைகள் இந்த கால்வாயில் அடைப்பட்டு நீர் செல்ல வழியின்றி கழிவுகள் தேங்கியுள்ளது. 

               

இதுவே மழை நேரமாக இருப்பதால் அனைத்து கழிவுகளும் இவர்களின் வீடுகளுக்குள் சென்று விடுகின்றது. நேற்று முந்தினம் சுமார் அரை மணிநேரம் பெய்த மழைக்கே இந்த வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடிய பல பரவும் அபாயம் உள்ளது.  

இந்த பிரச்சனை தொடர்பாக முன்பே ஒரு பதிவை நாம் பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பார்க்க..
http://adiraipirai.blogspot.in/2013/09/10_9.html








எனவே இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நல்ல ஒரு உதவி செய்யுமாறு சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிரோம்.

information by: adirai pirai reporter N. Khaalid ahamed

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)