இதோ ரமலான் நோன்பு நம்மை நெருங்குகிறது, வருடாவருடம் நமது ஊரில் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) ஒரு பள்ளியில் நோன்பு திறக்கும்போது நடக்கும் அநீதியை இங்கே உங்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் இந்த தவறை அவர்கள் திருத்திக்கொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த பதிவை இங்கே பதிவிடுகிறோம்.
நோன்பு திறக்கும்போது நமது ஊர் அதிரையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறியவர்கள் பெரியவர்கள் சேர்ந்து இருந்து நோன்பு திறப்பதை காலம்காலமாக பார்த்துவருகிறோம். இதில்தான் அதிக சிறப்பும் இருக்கிறது. ஆனால் நமது ஊரில் உள்ள ஒரு பள்ளியில் நோன்பு திறக்கும்போது ஏழை சிறுவர்களை அங்கே தனியே அமர்த்திவிட்டு சிலர் தனியாக பள்ளியில் வேறு பகுதியில் அமர்ந்து கொண்டு சிறப்பான உணவை வீட்டில் இருந்து கொண்டுவந்து வைத்துக்கொண்டு, பள்ளியில் காய்ச்சும் கஞ்சியை முதலில் எடுத்து வைத்துக்கொண்டு மீதம் உள்ள கஞ்சியில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் இது வருடா வருடம் நிகழ்ந்து வருகிறது. பலமுறை சொல்லியும் அவர்கள் திருத்திக்கொள்வதாக இல்லை.
இங்கே பதிவிடுவதன் மூலமாவது நிலையை மாற்றிக்கொள்வார்கள் என்ற நல்ல எண்ணத்திலும் ஆசையினாலும் இங்கே இதை பதிவிடுகிறோம். இன்ஷா அல்லாஹ் இந்த வருடத்திலிருந்து திருத்திக்கொள்ளுங்கள்.
குறிப்பு: மஸ்ஜித் மீது அவபெயரை ஏற்படுத்தாமல் இந்த செயதை மட்டும் அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பள்ளியின் பெயரை குறிப்பிடவில்லை.
முஹம்மத் யூஸஃப்
தம்மாம் - சவுதி
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது