அதிரை
பேருந்து நிலையத்தை தி.மு.க தலைவர் டாக்டர்.கருணாநிதி அவர்களின் 91வது பிறந்த நாளை
முன்னிட்டு இன்று மாலை 6:00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
நிகழ்ச்சி
துவக்கமாக அதிரை பேரூர் கழக துணை செயலாளர் அன்சர் கான் அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூர் கழக அவை தலைவர் அப்துல்காதர் அவர்கள்
தலைமை தாங்கினார்கள்.
இப்பொதுக்கூட்டத்திற்கு
அதிரை பேரூர் கழக செயலாளர் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் இராம.குணசேகரன்,
மாவட்ட பிரதிநிதி எஸ்.இன்பநாதன், பேரூர் மீ.அ.அமைப்பாளர் அ.இராஜதுரை மா.பிரதிநிதி
மிராசா, அதிரை எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளர் பழஞ்சூர் செல்வம், நகர பொருளாளர்
கோடிமுதலி, மு.ஒ.இ.அ. அமைப்பாளர் சபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில்
முன்னால் மத்திய இணைஅமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான திரு.S.S.பழனிமாணிக்கம்
அவர்களும், தலைமை கழக பேச்சாளர் ஆடுதுறை.உத்திரபதி அவர்களும் முன்னால் சட்டமன்ற
உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமனியன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக பேருர் கழக துணை செயலாளர் தில்லை நாதன் அவர்கள் நன்றியுரையாறினார்கள்.
இறுதியாக பேருர் கழக துணை செயலாளர் தில்லை நாதன் அவர்கள் நன்றியுரையாறினார்கள்.
இதில்
அதிரை மற்றும் சுற்றவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளும்,
தொண்டர்களூம் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது