தண்ணீருக்காக கண்ணீர் விடும் அதிரை மக்களின் அவல நிலை!

0
அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இதுவும் ஒன்று. வயல்களும், தோப்புத்துரவுகளும் நிரம்பி பசுமையுடன் குளிர்ச்சியான கடல் காற்றுடன் அமைந்திருக்கும் எழில் கொஞ்சும் ஒரு நகரம்.தொழில் வளர்ச்சியிலும், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் என்னும் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் ஊறாக இது இருந்தாலும் கூட அரசாங்கத்தால் மட்டும் தொடர்ந்து நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

உண்மை தான், முன்பொரு காலத்தில் நீர் வளமும், நில வளமும் நிறைந்த இந்த ஊர் தற்பொழுது ஒரு சிலரின் சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்க்காகவும் நீர் வளமற்று காணப்படுகிறது.

சில மாதங்கள் முன்பு வரையிலும் அதிராம்பட்டினம் மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் என்றால் என்ன என்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் தற்போதைய நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக அதிரையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடால் பொதுமக்கள் , பெண்கள் சாலையில் இரங்கி போராட்டம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது.

தற்போதைய சூழலில் அதிரையின் சில பகுதிகளில் 200 அடி ஆழத்துக்கும் அதிகமாக போர் போட்டால் கூட தண்ணீர் வராத நிலை உள்ளது.

தற்பொழுது ஒரு வாரமாக அதிராம்பட்டினம் 4 வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியர் கோவில் தெருவில் தண்ணீர் விநியோகமே செய்யப்படாமல் உள்ளது. இது குறித்து E.O விடம் தொடர்புகொண்டு கேட்டால் சரியான விளக்கம் தராமல் மழுப்புவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனால் 1 வாரமாக 1குடத்திற்க்கு 30 ரூபாய் கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம் என்கின்றனர்  இந்த தெரு வாசிகள்.அது போல் அதிரை 11வது வார்டிலும் தண்ணீர் விநியோகிக்காமல் இருந்ததால் இன்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இது போல் நமதூர் மக்கள் தினந்தினம் தண்ணீருக்காக படும் கஷ்டம் பல. இது பேரூர் நிர்வாகத்தின். சூழ்ச்சியா இறைவனுக்கே தெரியும்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)