Dr.Pirai - கர்ப்பிணிகளுக்கான ஊட்டச் சத்து.

Unknown
0


கர்ப்பிணிகளுக்கான ஊட்டச் சத்து

  • கர்ப்பிணிகள் என்றால் இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்காக இருவர் சாப்பிடும் அளவிற்கு உணவு உண்ண வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள்.



  • உங்களுக்குத் தேவையான சரிவிகித உணவுவோடு, உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் சேர்த்து உங்கள் உணவு அமைய வேண்டும். 



  • அதாவது நீங்கள் எப்போதும் சாப்பிடும் உணவில் கூடுதலாக 300 கலோரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். 



  • நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தான், உங்களது குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் உடல் நலத்திற்கு பெரிதும் உதவுகிறது என்பதை மனதில் வையுங்கள்.


  • மீன், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், குறைந்த கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் போன்றவை உங்களது தினசரி உணவில் கலந்திருக்க வேண்டும்.



  • எந்த வகை உணவாக இருந்தாலும் அன்றைய தினமே சமைத்து அன்றைய தினமே சாப்பிட வேண்டும். பழைய பொருட்கள் எதையும் உண்ண வேண்டாம். வெளியில் விற்கும் பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்கவும். நல்ல சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட உணவை மட்டுமே உட்கொள்ளுவது அவசியம். நொறுக்குத்தீணி சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக் கொண்டு அந்த சமயத்தில் பச்சை கேரட், ஆப்பிள், ஊறவைத்த தானியங்கள், பயறு வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


  • பழங்களை சாறு பிழிந்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதன் மூலம் நார் சத்தும் கிடைக்கும். பழச்சாறு மூலமாக உடலில் சேரும் தேவையற்ற சர்க்கரையின் அளவும் குறையும்.



  • தானியங்களை அதாவது, மூக்கடலை, சோயாபீன்ஸ், பயறு, வேர்க்கடலை போன்றவற்றை முந்தைய நாள் ஊறவைத்து மறுநாள் அதனை சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பச்சையாக சாப்பிடுவது பிடிக்காவர்கள் அதனை வேகவைத்து அதனுடன் சீரகம் சேர்த்து சாப்பிடலாம். பருப்புகளால் ஏற்படும் பிரச்சினை சீரகத்தால் கட்டுப்படுத்தப்படும்.


பால் பொருட்களில் காபி, டீயை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, இளம்சூடான பால், மோர் போன்றவற்றை அருந்தலாம்.

  • கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியமானது கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள்தான். ஒரு நாளைக்கு ஒரு கர்ப்பிணிக்கு 1,000 (1 மில்லி கிராம்) மைக்ரோ கிராம் கால்சியமும், 30 மைக்ரோ கிராம் (0.03 மில்லி கிராம்) இரும்புச் சத்தும் தேவைப்படுகிறது. அதற்காக மருத்துவர்கள் மாத்திரைகள் தருவார்கள். ஆனாலும் அவை வளரும் உங்கள் குழந்தைக்கு போதாது. எனவே பேரிட்சம்பழம், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது. இல்லையென்றால் நீங்கள் உங்கள் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தையும், ரத்தத்தில் இருக்கும் இரும்புச் சத்தையும் இழக்க வேண்டி வரும்.



  • பால், ஆரஞ்சு பழச்சாறு, சோயா பால் போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.


  • கறி, முட்டை, தானியங்கள், உலர்ந்த பட்டாணி, உலர்ந்த பழங்க, அடர்ந்த பச்சை நிறமுள்ள காய்கறிகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது.

  • பல்வேறு ஊட்டச்சத்துக்களை ·போலிக் ஆசிட் என்பார்கள். இது கர்ப்பிணிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 400 மைக்ரோ கிராம் (0.4 மில்லி கிராம்) தேவைப்படுகிறது. 

  • கருவின் மூளை மற்றும் முதுகெலும்புகளின் உருவாக்கத்திற்கு ·போலிக் ஆசிட் முக்கியப் பங்காற்றுகிறது.

மருத்துவர்கள் தற்போது ·


  • போலிக் ஆசிட் மாத்திரைகளை கர்ப்பிணிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.
  • கீரை, கேரட், முட்டைகோஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

  • ஒரு பழம், ஒரு பிடி தானிய வகை (ஊறவைத்தது அல்லது வறுத்தது), பச்சைக் காய்கறியில் ஒரு வகை, ஒரு டம்ளர் பால், முட்டை போன்றவை உங்களது அன்றாட உணவில் நிச்சயம் இடம்பெறுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

  • பாதி அழுகிய, கெட்டுப்போன காய்கறிகள், பழங்களை எக்காரனம் கொண்டும் உண்ண வேண்டாம். முந்தைய நாள் சமைத்த எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. அதில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் உடல் நலத்தை மட்டுமல்லாமல் கருவின் நலனையும் பாதிக்கும் ஆற்றல் கொண்டது. 


அருமருந்தான தண்ணீர்

  • தண்ணீர் என்று சொன்னால் இதில் என்ன இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள். தண்ணீர்தான் கர்ப்பிணிகளுக்கான அருமருந்தாகும். எப்போதும் குடிப்பதை விட 3 மடங்கு அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிப்பதால் சாதாரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். கை, கால்களில் வீக்கம், சிறுநீர் தொற்று போன்றவை கர்ப்ப காலத்தில் ஏற்படாமல் தடுக்க தண்ணீர் மட்டுமே சரியான மருந்தாகும். மேலும், பனிக்குடம் எனப்படும் கருவைச் சுமக்கும் பகுதியில் தண்ணீர் அதிகமாக இருந்தால் சுகப்பிரசவம் எளிதாக இருக்கும்.

  • பனிக்குடத்தில் தண்ணீர் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலையு‌ம் ஏற்படாது



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)