பிரேசில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் பந்துகளை தயாரிப்பவர்கள் யார்? தெரியுமா "ஹிஜாப்" உடை அணிந்த இஸ்லாமிய பெண்கள்!!!
-எதிர்வரும் 12 ம் தேதி பிரேசிலில் ஆரம்பிக்க இருக்கின்ற FIFA உலகக்கோப்பை கால் பந்தாட்ட போட்டிக்கு தேவையான அணைத்து பந்துகளையும் கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் மிகவும் புகழ்பெற்ற SIALKOT என்ற நிறுவனமே தயார் செய்கின்றது.இதில் முக்கியமான அம்சம் இங்கு தயாரிக்கப்படும் அனைத்து பந்துகளுக்குமான வேலைப்பாடுகளும் பெண்களாலேயே உலகத்தரத்தில் தயாரிக்கப்படுகின்றது.இதில் வேலை பார்க்கும் அநேகமான பெண்கள் ஹிஜாப் உடை அணிந்தவாறு, இஸ்லாமிய காலாச்சார உடையுடனேயே பணியாற்றுகின்றனர்.
1995 ம் ஆண்டிலிருந்து உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான பந்துகளை adidas நிறுவனத்தின் கீழ் இயங்கும் Forward என்ற ஜேர்மன் நிறுவனமே உற்பத்தி செய்துவந்தது. ஆனால் பின்னாளில் இன்னுருவனத்தில் ஏற்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கடும் உற்பத்தி மந்த நிலை காணப்பட்டது. இதன் விளைவாகவே இம்முறை பாகிஸ்தானிய உற்பத்தி நிறுவனத்திற்கு FIFA நிர்வாகம் உரிமத்தை வழங்கியிருக்கின்றது.
இதில் பணியாற்றும் ஒரு பெண் குறிப்பிடுகையில் : எதிர்வரும் 12 ம் தேதி பிரேசிலில் நாங்கள் தயார் செய்த பந்துகளைத்தான் சர்வதேச வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ போன்றோர் விளையாடப்போகின்றார்கள், இறைவன் நாடினால் நாங்களும் இதனை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம் என குறிப்பிட்டார்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது