இந்தியத் தயாரிப்பான ஹல்திராம்ஸ் உண்ண ஏற்றதல்ல என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எப்.டி.ஏ., தெரிவித்துள்ளது.ஹல்திராம்ஸ் மட்டுமின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல நொறுக்குத்தீனிகள் விற்பனைக்கு தகுதியானதல்ல என்று அமெரிக்காவின் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேகி சர்ச்சை இந்தியா மட்டுமின்றி உலக அளவில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு பொருட்களை சோதனை செய்யக் காரணமாகியுள்ளது
ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம்:நாக்பூரை தலைமையாக கொண்ட ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை மறுத்துள்ள ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் தயாரிப்பு 100 சதவீதம் பாதுகாப்பானது. சில ரசாயனங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அனுமதிக்கப்படுவதில்லை என கூறினார்.
எப்.டி.ஏ., இணையதளத்தில் உள்ள தகவலின்படி, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் முதன்முறையாக ஹல்திராம்சில் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல், இன்று வரை 86 முறையாக ஹல்திராம்ஸ் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய எப்.டி.ஏ., மறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Courtesy: dinamalar
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது