அதிரை கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல், பேரூராட்சி அதிரடி நடவடிக்கை!!

2
அதிரையில் பேருராட்சித் தலைவர் அவர்களால் மார்ச் 2012 அன்று தடை செய்யப்பட்ட பாலிதீன் சட்ட விரோதமாக அதிரையின் பெரும்பாலான கடைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.இந்நிலையில் நேற்று சட்ட விரோதமாக பாலிதீன் பைகளை உபயோகித்த பல கடைகளுக்குள்
நிழைந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக பாலிதீன் பைகளை கைப்பற்றி அபராதம் விதித்துச் சென்றனர்.இதை பிரப்பித்த ஆரம்ப காலக்கட்டத்தில் நமதூரில் பாலிதீன் பைகளை காணக்கூட முடியவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல மீண்டும் அதிரைக்கு மீண்டும் வந்தது.இந்த புகாரை நாம் இரண்டு முறை அதிரை பிறை தளத்தில் பதிந்துள்ளோம்.ஆனால் எந்த பயனும் இல்லை,தற்போது
பேரூராட்ச்சி நிர்வாகம் மேற்க்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்க்கிறோம்.பாலிதீன் பைகளை மேலும் உபயோகிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதே.
கடை வியாபாரிகளே இப்பவே பாலிதீன் பைகளை உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் உங்களுக்கும் ஃபைன் தான்.

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாற்றம் என்பது அரசியலில் மட்டும் வந்தால் போதாது...
    ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் வரவேண்டும்...

    சிங்கப்பூரில் குப்பையை ரோட்டில் போட்டால் ஃபைன் அடிக்கிறான்னு சட்டைப்பையில் வச்சிக்கிட்டு போயி குப்பை தொட்டியில் போடும் அதே நம்மளுதான்...
    நம்ம ஊருக்கு வந்துட்டு காரில் போகும் போதே தின்னுட்டு குப்பைய ரோட்டில் வீசுறான்....

    ஒழுங்குமுறைகளை சரியா பின்பற்றாத எந்த நாடும் முன்னேற்றப்பாதையில் பயனித்ததில்லை....

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் கவியன்பன் கலாம் அவர்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்

      Delete
Post a Comment