அதிரை அரசு மருத்துவமனையில் துவங்க இருக்கும் 24 மணி நேர சேவை

0


சமீப காலங்களில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை எடுத்துக் கொண்டால் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. மேலும் இது போன்ற விபத்துகளில் அதிகம் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. இந்த விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தால் பட்டுக்கோட்டை, தஞ்சை போன்ற பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் காயமடைந்தவரின் உயிர் பிரிந்து விடும் துயர நிலை தொடருகிறது. 

மேலும் இரவு நேரங்களில் ஒருவருக்கு திடீர் என்று உடல் முடியாமல் போனால் முதலுதவிக்கு கூட இரவு நேர மருத்துவமனை என்று ஒன்று இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.N.R.ரங்கராஜன் அவர்கள் சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் அவர்களிடம் பல முறை வலியுறுத்தி கேட்டுக்கொண்டதற்கினங்க, அவர் இந்த திட்டத்தை செயல் படுத்த உறுதி அளித்துள்ளார்.

அதிரை மக்களின் நெடு நாள் கோரிக்கையை ஏற்று அதிரை அரசு மருத்துவமனைக்கு இந்த இரவு நேர சேவையை கொண்டுவந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.N.R.ரங்கராஜன் அவர்களுக்கு அதிரை மக்களின் சார்பாகவும் அதிரைபிறை.காம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிரோம். மேலும் தங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)