அதிரை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு..!

1
அதிரையில் உள்ள 21 வார்டுகளில் உள்ள கால்நடைகளும் உரிமையாளர்களின் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே அலைந்து திரிகின்றன. குப்பைகளில் கிடக்கும் விஷத்தன்மையுடைய மக்காத பாலிதீன் மைகளையும், மேலும் நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களையும் உண்ணுகின்றன. இதனால் அன்மை காலமாக அதிரையில் கால்நடைகளின் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. 



மேலும் தற்பொழுது கால்நடைகளுக்கு கோமாரி என்னும் நோய் பரவி வருவதால் கால்நடைகள் உயிர் இழந்து வருகின்றன, என மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.






இது போன்று பராமரிப்பு இன்றி திரியும் ஆடு, மாடுகள் அதிரையின் முக்கிய சாலைகளின் குறுக்கே வழி மறித்துக் கொண்டு நிற்கின்றன. இதனால் அன்மை காலமாக நம் ஊரில் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.



Photo: #பிரசவிக்க முடியாமல் தவித்த பசு மாட்டின் வயிற்றில் 40 கிலோ பாலிதீன் குப்பை:

மன்னார்குடியில் கன்றை பிரசவிக்க முடியாமல் தவித்த பசு மாட்டின் வயிற்றிலிருந்து 40 கிலோ பாலித்தின் குப்பைகளை கால்நடை மருத்துவர்கள் அகற்றினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் நடராஜன். இவரது வீட்டில் வளர்க்கப்படும் பசுமாடு சினை பிடித்திருந்தது. நேற்று முன்தினத்திலிருந்து கன்றை பிரசவிக்க முயற்சித்தும் முடியவில்லை.

இதையடுத்து நேற்று மாட்டை மன்னார்குடி கால்நடை மருத்துவமனைக்கு நடராஜன் அழைத்து சென்றார். அதை பரிசோதித்த டாக்டர், கன்று குட்டி வயிற்றிலேயே இறந்து விட்டது. அறுவை சிகிச்சை செய்துதான் கன்று குட்டியை அகற்ற வேண்டும் என்றார். அதன்பிறகு, 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து இறந்துபோன கன்று குட்டியை வெளியே எடுத்தனர். அதன் பிறகும் மாட்டின் குடலில் பெரிய அளவிலான உருண்டை ஒன்று இருந்தது. அது கொழுப்புக்கட்டியாக இருக்கலாம் என பரிசோதித்த போது அது அனைத்தும் பாலிதீன் பைகள், மற்றும் மக்காத குப்பைகளாக இருந்தன. 

உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மக்காத குப்பைகள் அகற்றப்பட்டன. அதில், பாலிதீன் பைகள் மட்டுமின்றி கண்ணாடித் துண்டுகள், கம்பிகள், மரக்கட்டைகளும் இருந்தன. இதுபற்றி அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கூறும்போது, ‘‘பசு மாட்டின் வயிற்றில் பாலிதீன் பைகள் இருந்தது. 40 கிலோ எடை உள்ள இந்த குப்பைகளை செரிக்க வைப்பதற்காக அதன் குடல் முயற்சித்ததன் காரணமாக உருண்டையாக மாறி விட்டன. அதனால் கன்றுக்குட்டி வெளியே வரமுடியாமல் இறந்துவிட்டது‘‘ என்றார்.

நல்ல தகவல்களை தொடர்ந்து வழங்குவது...
"நல்லதை SHARE பண்ணுங்க"
www.facebook.com/NallathaiSharePannunka
★☆★ ✔Tag ✔ Share ☆★☆

இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்ட அதிரை பேருராட்சி, இனி சாலைகளில் திரியும் கால் நடைகளை அதன் உரிமையாளர்கள் பரமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சாலைகளில் திரியும் பட்சத்தில் அதனை பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


                                                                                                                                     இப்படிக்கு,
செயல் அலுவலர்,
அதிரை பேரூராட்சி. 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. குப்பையை அல்லணும். அதை அலட்சியப்படுத்திவிட்டு பழியை போடுவதா?

    ReplyDelete
Post a Comment