
அமர்வில் கலந்து கொண்டவர்கள்:
கடற்கரைத் தெரு ஜமா அத் சார்பாக
1. பொறியாளர் அஹ்மது அலீ (தலைவர்)
2. சகோ. அஹ்மது ஹாஜா (து. தலைவர்)
3. சகோ. ஜேஜே சாவன்னா (செயலாளர்)
அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக:
சகோ. அஹ்மது (அமீர்)
நான் (ஜமீல் - செயலாளர்)
சகோ. குலாம் (யூ.கே)
சகோ. ஜஹாங்கீர்
சுருக்கம்:
இணைப்பில் காணும் வேண்டுகோள் மனுவின் சுருக்கம் எடுத்துக் கூறப்பட்டது. கடற்கரைத் தெருவின் கடந்தகாலக் கந்தூரிகளின்போது நடைபெற்ற கலவரங்கள், பெண்கள் பகுதியில் ஆண்கள் புகுந்தது, கண்டித்தது, அதனால் ஏற்பட்ட வாக்குவாதம், அடி-தடி ஆகியவைகளைப் பற்றி ஜமா அத் செயலாளர் விவரித்தார்.
ஒருமுறை நடந்த கலவரத்தில் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜஹாங்கீர் தெரிவித்தார்.
"கந்தூரி என்று இருப்பதால்தானே இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுகின்றன. அது இல்லாவிட்டால் கலவரங்களும் இருக்காதே!" என்ற ஆற்றாமையை குலாம் வெளிப்படுத்தினார்.
"கந்தூரி இருப்பதால்தான் வருடத்துக்கு ஒருமுறையாவது தர்ஹாவுக்குப் பெயிண்ட் அடிக்கிறார்கள். இல்லாவிட்டால் அதுவும் நடக்காது. புராதனச் சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும்" ஜமாஅத் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.
"நமக்குள் மாற்றம் வரவேண்டும். மாறாமலே இருக்க முடிவு செய்திருந்தால் நம் கண்முன்னே பெரிய தைக்கால் இடிக்கப்பட்டு, பள்ளிவாசல் ஆகியிருக்காது" என்ற தகவலை குலாம் பதிவு செய்தார்.
கபுரு வழிபாட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவிப்பவர் என்று அறியப்பட்ட ஜமாஅத்தின் துணைத் தலைவர், அமர்வின் கருவைத் தவிர்த்து, அரசியல்-அமைப்புகள் குறித்துப் பேச்சைத் திருப்பினார்.
"நாங்கள் வந்திருப்பது அரசியல்-அமைப்புகள் பேசுவதற்கல்ல" என்று நான் குறுக்கிட்டு மறுத்துரைத்தேன்.
அமர்வின் பேசுபொருளைத் தவிர்த்த ஜமாஅத் துணைத் தலைவரின் போக்கு, தமக்குப் பெருத்த ஏமாற்றம் அளித்ததாக அமீர் பிற்பாடு வேதனைப்பட்டார்.
கந்தூரிக்கு தெரு வசூல் கொடுக்கக்கூடாது என்று தடை போட்டிருப்பதாக ஜமாஅத் செயலாளர் தெரிவித்ததோடு தர்ஹா ட்ரஸ்ட்டிகளைச் சந்திக்கவேண்டும் என்று நான் வைத்த கோரிக்கைக்கு ஆட்களையும் சில ஆலோசனைகளையும் சொன்னார்.
கந்தூரிக்கு எதிராகச் செயல்பட ஜமாஅத் முன்வர வேண்டும் என்ற குலாமின் கோரிக்கையை, "அது பெரும் பிரச்சினையில் முடியும்" என்று ஜமா அத் செயலாளர் ஆட்சேபித்தார்.
"எங்களுடைய கடமை, தீமைகளை எடுத்துச் சொல்வது; இறைவனின் விசாரணைக்கு பதில் வைத்துக்கொள்வது" என நான் சொன்னதோடு அமர்வு நிறைவுற்றது.
***
“...இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்” (அல்குர் ஆன் 5:2).
எனும் இறைவனின் வாக்குக்கு இணங்க, பாவமான கந்தூரிக்கென கஷ்டப்பட்டு ஈட்டும் ஹலாலாக சம்பாத்தியத்தில் பங்கு ஒதுக்குவதும் அதில் பங்குபெறுவதும் பாவம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
ஜமீல், செயலாளர் - அதிரை தாருத் தவ்ஹீத்


thanks to:adirainirubar.in
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது