பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

0
பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம், இது பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் பட்டுக்கோட்டை தாலுக்காவிற்க்கு உட்பட்ட ஊர்களில் வசிக்கும் மக்கள் அனைத்து விதமான
அரசு சான்றிதல்களையும் பெறுவதற்க்கு அன்றாடம் வந்து செல்கின்றனர். 

இந்த அலுவலகம் பற்றி முன்பே பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. சான்றிதலை பதிவதற்க்கு லஞ்சம், அப்லிகேசன் பாரம் வாங்குவதற்க்கு  லஞ்சம், சான்றிதலை பெறுவதற்க்கு லஞ்சம் என அன்றாடம் நடக்கும் அனைத்து அலுவல்களும் லஞ்சத்தில் தான் நடந்துக் கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக பல புகார்கள் அளித்தும் நடவடிக்கையில்லை எங்கின்றனர் பாதிக்கப்பட்டோர். 

இந்நிலையில் தான் இரண்டு வருடத்துக்கு முன் சக்திவேல் என்பவர் ரேஷன் கார்டு பதிவதற்க்காக பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்திற்க்கு சென்று சம்பத்தப்பட்ட அதிகாரியை அனுகியுள்ளார், அதற்க்கு அந்த அதிகாரி 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். யார் இந்த சக்திவேல்? பாவம் அன்றாடம் கூல் விற்றுப் பிழைக்கும் ஏழை வியாபாரி.

 இவரால் 2000 ரூபாய் லஞ்சம் தர இயலுமா? இந்த லஞ்சம் தர இயலாத காரணத்தினால் அந்த அதிகாரி ரேஷன் அதிகாரி இரண்டு வருடமாக ரேஷன் கார்டு தராமல் அலைய விட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சக்திவேல் அழுதுகொண்டே அலுவலகத்தின் மரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அலுவலகத்துக்கு விரைந்த R.T.O ரேஷன் உடனே வழங்க உத்தரவிட்டார். 

பட்டப்பகளில் பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலை முயற்சியால் தாலுக்கா அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)