அதிரையில் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடங்களை கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை பகுதியை நோக்கி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன்பேரில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியில் உள்ள அதிரை, ஏரிப்புறக்கரை, கொள்ளுக்காடு மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடங்களை கலெக்டர் சுப்பையன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தண்ணீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
டிஆர்ஓ சுரேஷ்குமார், ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் பாஸ்கரன், ஆர்ஐ கார்த்திகேயன், விஏஓ விஸ்வலிங்கம் உடனிருந்தனர்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது